உங்கள் எதிரிகளிடமிருந்து விடுபட செய்ய வேண்டிய பரிகாரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவை..
நம் வாழ்வில் நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள், எதிரிகளும் இருக்கிறார்கள். சில சமயங்களில் பொறாமையின் காரணமாக மக்கள் நம்மை எதிரிகளாகக் கருதத் தொடங்குகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எப்பொழுதும் நமக்குத் தீமையையே செய்ய விரும்புவார்கள். சில சமயங்களில், ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது, இந்த எதிரிகள் நம்மை ஆதிக்கம் செலுத்தத் தொடங்குகிறார்கள்.
பகைக்கு காரணம் எதுவாக இருந்தாலும் எதிரிகளால் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். இன்னும் சொல்லப்போனால் எதிரிகள் சிலரால், வாழ்க்கையில் பெரும் சிக்கலில் சிக்கிக் கொள்கிறோம். அதிலிருந்து எந்த வழியும் தெரியவில்லை என்று நினைக்கிறீர்களா..? எதிரிகளிடமிருந்து விடுபட சில வழிமுறைகள் உள்ளன. இந்த நடவடிக்கைகள் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. எனவே, எதிரிகளை விரட்டும் வழிகளை தெரிந்து கொள்வோம்..
எதிரிகள் தொல்லை நீங்க பரிகாரம்:
எப்போதுமே, எதிரிகள் தொல்லையால் வாழ்வில் முன்னேற முடியாமலும், நிம்மதி இல்லாமலும் தவிக்கிறீர்களா? திண்டுக்கல்லில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு சென்று இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள். ஒருவேளை உங்களால் அங்கு செல்ல முடியவில்லை என்றால், உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் கூட இந்த பரிகாரத்தை செய்யுங்கள். அதுவும் குறிப்பாக சனிக்கிழமை அன்று தான் இந்த இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஏனெனில், வினை தீர்ப்பதற்கு ஏற்ற நாள் சனிக்கிழமையாகும். இன்று சனிக்கிழமை.
தேங்காய் பரிகாரம்:
தேங்காய் கொண்டு பரிகாரம் செய்வதற்கு முன் முதலில் ஒரு மஞ்சள் துணியில் ரூ.11 காணிக்கையை எடுத்து வைத்து, மாரியம்மன் கோவிலுக்கு சென்று எதிரிகள் தொல்லையை அகல வேண்டும் என்று மாரியம்மனை மனதார நினைத்து வேண்டிக்கொள்ளுங்கள். அதுபோல், கோவிலுக்கு செல்லும் போது 8 தேங்காய், 8 எலுமிச்சை பழம், 8 ஊமத்தங்காய், 8 குமட்டிக்காய் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு கோவிலுக்கு செல்லுங்கள். பின் தேங்காயில் இருக்கும் நாருகளை சுத்தமாக நீக்கி விட்டு, அந்த தேங்காயின் மீது உங்களுடைய பிரச்சனையை எழுதி, அம்மனின் பாதத்தில் வைத்து, உங்களுடைய பிரச்சனையை சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: "இந்த" பிரச்சனையால் அவதிப்படுறீங்களா? செம்பு பாத்திரத்தில் "இந்த" ஜோதிட பரிகாரங்களை செய்யுங்கள்!
அதன்பின், கோவில் பிரகாரத்தில் தேங்காய், எலுமிச்சை பழம், ஊமத்தங்காய், குமட்டிக்காய் ஆகியவற்றை இரண்டாக உடைத்து அவற்றை அங்கிருக்கும் குப்பை தொட்டியில் போடவும். பிறகு அங்கு குளம் இருந்தால் குளித்து விட்டு செல்லுங்கள் அல்லது கை, கால்களை கழுவி விட்டு செல்லுங்கள். இவற்றிற்கு பின், 2 அர்ச்சனை தட்டுக்கள் வாங்கவும். ஒன்று உங்களுடைய பெயரிலும், மற்றொன்று, உங்கள் எதிரியின் பெயரிலும் வாங்கி அர்ச்சனை செய்ய வேண்டும். முக்கியமாக, நீங்கள் உங்கள் எதிரியின் பெயரில் அர்ச்சனை செய்து கொடுக்கும் பிரசாதத்தை கோவில் அர்ச்சகரிடமே கொடுத்து விடுங்கள். உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொடுக்கும் பிரசாதத்தை மட்டும் வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள்.
இதையும் படிங்க: வீட்டில் ஊதுபத்தி ஏற்றுங்கள்... எதிர்மறை சக்தியை விரட்டுங்கள்..!!
தொடர்ந்து 11 நாட்கள் செய்யுங்கள்:
ஒருவேளை உங்களால் இந்த பரிகாரத்தை செய்ய முடியவில்லையென்றால், அருகில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு சென்று தொடர்ந்து 11 நாட்கள், உங்களின் எதிரியின் பெயரில் அர்ச்சனை செய்யுங்கள். 11 நாட்கள் பிறகு நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D