தரித்திரமும் ,வீண் செலவும் துரத்துதா? 4 காச சேக்க முடியலயா?அப்ப இந்த விளக்குல தீபம் ஏத்துங்க!எல்லாமே மாறிடும்

By Asianet Tamil  |  First Published Apr 30, 2023, 7:08 AM IST

வீட்ல தரித்திரம் நீங்கவும், தண்ட செலவ குறைக்கவும், சம்பாதிச்ச காசு தங்கவும் எந்த விளக்கை ஏற்ற வேண்டும் என்று பதிவில் காணலாம்.


என்ன தான் இரவு பகல் என்று பார்க்காம ஓடி திரிந்து அலைந்து சம்பாதித்தாலும் 4 காசு கூட வீட்ல தங்க மாட்டேங்குது. எப்போதும் வீட்டு செலவுக்காக கடன் வாங்கி தான் காலத்தை தள்ள வேண்டிருக்கு. எப்ப தான் இந்த நிலைமை மாறுமோ என்று தான் பலரும் நொந்து போகிறார்கள்.புலம்பி தள்ளுவார்கள். இப்படியான புலம்பல்களையும்,குழப்பங்ககளையும் நாம் தினமும் 4 பேரிடமாவது கூறி கொண்டே தான் இருப்போம்.  இப்படியே எல்லா காசும் கரைந்து போனா என்ன செய்வது என்று பயமா இருக்குதா?

இனி இப்படி பயப்படவோ, புலம்பவோ தேவையில்லை. இந்த விளக்கை வீட்டில் வாங்கி வைத்து இதில் தினமும் தீபம் ஏற்றி வச்சீங்கன்னா போதும். உங்களது வீட்டில் தரித்திரம் அண்டாம, 4 காசு என்ன ? எவ்ளோ காசுன்னாலும் சேர்த்துக்கிட்டே போலாம்.
வீட்ல தரித்திரம் நீங்கவும், தண்ட செலவ குறைக்கவும் ,சம்பாதிச்ச காசு தங்கவும் எந்த விளக்கை ஏற்ற வேண்டும் என்று பதிவில் காணலாம்.

செல்வங்களுக்கெல்லாம் அதிபதியான குபேரரூம் அவருக்கு அப்படியான வரத்தை கொடுத்த லட்சுமி தேவியையும் ஒன்றாக சேர்த்து வழிபட்டு வந்தால் குறைவற்ற செல்வ வரம் கிடைக்கும்..! அன்னை லட்சுமி தேவி மற்றும் குபேரரின் அருளை கிடைக்க செய்யும் விதத்தில் உருவானது தான் இந்த அஷ்ட லட்சுமி / லட்சுமி குபேர விளக்கு..!

இந்த விளக்கை தினமும் ஏற்றி வழிபாடு செய்து வந்தாலே உங்களது வீட்டில் மகாலட்சுமியின் அருளும்,கடாட்சமும் நிறைந்து காணப்படும். இப்படி உங்க வீட்டு பூஜை அறையில் இந்த விளக்கை ஏற்றி வழிபாடு செய்தால் வீடு முழுவதும் அன்னை மகாலட்சுமி நிறைந்திருந்து அதிர்ஷ்டத்தை அள்ளி தருவாள்.

இந்த விளக்கினில் தீபம் ஏற்றுவதால் அன்னையின் அருளும், ஆசியும் அதே நேரத்தில் குபேரரின் கோடீஸ்வர யோகமும் ஒரு சேர கிடைப்பதால் வீட்டில் குறைவற்ற செல்வமும் , பணமும் இரட்டிப்பாக ஆகும்.

  • வளம் தரும் இந்த விளக்கினால் ஏற்படும் நன்மைகள்:
  • பொருளாதாரத்தில மேன்மை கிடைக்கும்
  • வீட்ல நிம்மதி ,மகிழ்ச்சி, அமைதி எல்லாம் கிடைக்கும்.
  • செல்வ வளம் மட்டுமில்லாம மற்ற வளங்களும் நிறைந்து காணப்படும்.
  • வீட்ல இருக்குற வறுமை, துன்பங்கள் நீங்கி சுகவாழ்வு கிடைக்கும்.
  • கடன் பிரச்சனைகள் எல்லாம் முடிவுக்கு வந்து, பண வரவை ஏற்படுத்தும்.
  • வீட்டில் நிறைவான, நீங்காத அதிர்ஷ்டம் எப்போதும் தங்கும்.


நம்பிக்கை உள்ளவர்கள் இந்த லட்சுமி குபேர விளக்கினால் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தீங்கன்னா உங்க வீடு ஐஸ்வர்யமும், செல்வங்களும் நிறைந்த வீடாக மாறும்.
1300 வருடங்கள் பழமையான காலகாலேஸ்வரர் திருத்தலம்- மணல் லிங்கமாக காட்சியளிக்கும் ஈசன்!

Tap to resize

Latest Videos

click me!