1300 வருடங்கள் பழமையான காலகாலேஸ்வரர் திருத்தலம்- மணல் லிங்கமாக காட்சியளிக்கும் ஈசன்!

By Asianet Tamil  |  First Published Apr 29, 2023, 11:25 AM IST

இன்று நாம் அபிஷேகம் செய்ப்படாத நிலையில் இருக்கும் அதாவது மணலால் செய்யப்பட்டுள்ள சிவபெருமான் எழுந்தருளிய திருத்தலத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்
 


அபிஷேக பிரியரான சிவன பெருமானுக்கு ,பல்வேறு விதமான அபிஷேங்கள் செய்து பூஜை செய்து வழிபடுவார்கள்.
சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளிய சில தலங்களில் மூலிகையால் தைலாபிஷேகம் செய்தும் வழிபடுவார்கள். ஆனால் இன்று நாம் அபிஷேகம் செய்ப்படாத நிலையில் இருக்கும் அதாவது மணலால் செய்யப்பட்டுள்ள சிவபெருமான் எழுந்தருளிய திருத்தலத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஆலயத்தின் தனிச்சிறப்பு:

அருள்மிகு காலகாலேஸ்வரர் திருத்கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தினுள்ள கோவில்பாளையத்தில் என்ற இடத்தில அமைந்துள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையத்தில் உள்ள காலகாலேஸ்வரர் கோயிலில் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

வரலாற்று கதை:

மார்க்கண்டேயரின் ஆயுளை முடிப்பதற்கு சென்ற எமதர்ம ராஜா , தவறுதலாக சிவ பெருமான் மீது பாசக்கயிறை வீசினான். இதனால் சினம் கொண்ட சிவ பெருமான், பணியை முறையாக செய்யாத எம தர்மனின் பதவியை பறித்து சாதாரண மனிதனாக பிறக்க செய்தார்.

பூலோகம் வந்த எம தர்மன் விமோசனம் பெற பல தலங்களில் சென்று சிவனை வழிபட்டு வந்தார். அவர் இத்தலத்த்தினை அடைந்த பின்னர் ,சிவ வழிபாடு செய்ய எண்ணினார். எனில் இங்கு லிங்க வடிவம் எதுவும் தென்படவில்லை.

ஆகையால் மணலால் லிங்கம் செய்ய நினைத்தார். ஒரு மரக் குச்சியால் தரையை தோண்ட ஆரம்பித்தார். அப்போது, மணலில் இருந்து நுரை பொங்க தொடங்கியது. மணல் மற்றும் நுரை இவ்விரண்டையும் சேர்த்து அவர் லிங்கமாக பிரதிஷ்டை செய்தார். அப்போது சிவ பெருமான் அவருக்கு காட்சி அளித்து, பறிக்கப்பட்ட எமலோக ராஜர் பதவியை மீண்டும் அளித்தார்.

காலன் என்றால் எமன்
காலம் என்றால் வாழ்க்கை

பதவி கொடுத்தால் இத்தலத்து சிவபெருமானை காலகாலேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இத்திருக்கோவிலில் ஸ்வாமி, மணல் லிங்கமாக அமைக்க பற்றுள்ளதால் அபிஷேகம் செய்ய முடிவதில்லை.

எமனின் சாபம் நீக்கிய தலம்:

பழமை வாய்ந்த இந்தத் திருக்கோயில் எம தர்மனின் சாபம் நீக்கிய சிறப்பு பெற்ற தலம் என்ற பெருமை கூடியது. அதோடு இங்கு இருக்கும் குரு பகவான் இந்தக் கோயிலின் சிறப்பு.

குரு பரிகார ஸ்தலம்:

இந்தத் தலம் அதி சிறப்பு வாய்ந்த குரு பரிகார ஸ்தலம் ஆகும். மிக உயரமான குரு பகவான் சிலையை பார்த்ததும் நம் மனதில் வார்த்தையால் கூற முடியாத அமைதியும் , ஒரு விதமான மனா நிறைவும் உண்டாகும். இங்கு ஒவ்வொரு குருப் பெயர்ச்சி அன்றும் மிக விமரிசையாக பூஜைகள் மற்றும் புனஸ்காரங்கள் செய்யப்படுகிறது. இங்கு நவகிரகங்களில் அமைந்துள்ள சூரியன், சந்திரன், குரு, சனீஸ்வரர் ஆகியோருக்கு என்று தனித் தனி சன்னதி அமைந்திருக்கிறது.

ஆலய அமைவிடம்:

கோவை மாநகரில் இருந்து சத்தியமங்கலம் செல்கின்ற வழியில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைத்துள்ளது இந்த கோவில் பாளையம் எனும் சிற்றூர். அங்குள்ள பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு சில நிமிட நடை தூரத்தில் இந்த அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயிலை அடைந்து விடலாம்.

வினை தீர்க்க, வெற்றி பெற ,புண்ணியம் சேர, தன ஆகர்ஷணம் கிடைக்க வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு!

Latest Videos

click me!