Vastu Tips: வாழ்நாள் முழுவதும் புதுமண தம்பதிகள் உறவு நீடித்திருக்க.... இந்த டிப்ஸ் உதவும்...!!

Published : Jun 28, 2023, 05:33 PM ISTUpdated : Jun 28, 2023, 05:45 PM IST
Vastu Tips: வாழ்நாள் முழுவதும் புதுமண தம்பதிகள் உறவு நீடித்திருக்க.... இந்த டிப்ஸ் உதவும்...!!

சுருக்கம்

இந்து மதத்தினால் தாங்கள் செய்யும் எல்லா காரியத்திலும் வாஸ்து குறிப்புகளை பின்பற்றுகின்றனர். அதன்படி இளம் தம்பதியினர் தங்கள் வாழ்க்கையில் சில வாஸ்து குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் அவர்களின் வாழ்க்கை வளப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அது அவர்களது உறவை வலுப்படுத்தவும், நீடிக்கவும், ஆழமாகவும் மாற்றும்.

திருமணம் என்பது வாழ்க்கை பயணத்தில் ஒரு புதிய தொடக்கமாகும். சிலருக்கு திருமணம் ஆரம்ப நாட்களில் நல்ல நன்றாக இருக்கும் ஆனால் நாட்கள் செல்ல செல்ல அது சவாலாக இருக்கும். இது எந்த ஒரு உதவி உறவையும் சிதைத்து திருமண முறிவுக்கு வழிவகுக்கும். 

இன்றைய காலகட்டத்தில் புதுமண தம்பதிகள் தங்கள் சொந்த தங்களுக்கு என ஒரு சொந்த வீட்டை வாங்கி குடியிருக்கிறார்கள். அது அவர்களின் உலகமாகும். அதை தங்கள் தேவைகளுக்கு ரசனைக்கும் ஏற்ப வைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் புது வீட்டில் வேலை செய்து அவர்களின் உறவை கட்டி எழுப்ப சரியான நேரமாக இது இருக்கும். ஏனெனில்,  அவர்கள் ஒருவரையொருவர், புரிந்து கொள்ள வழிவகுக்கிறது. இது அவர்களின் உறவில் காதலி உயிருடன் வைத்திருக்க உதவுகிறது. இந்து மதத்தில் மக்கள் தங்கள் வீடுகளை வாஸ்து படி, காட்டுகிறார்கள். ஏனெனில் அது வீட்டில் உள்ள எதிர்மறை நீங்கி நேர்மறைக்கு வழிவகுக்கும். இதனால் வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு உண்டாகும்.

இதையும் படிங்க: Relationship Tips: மகிழ்ச்சியான தம்பதிகளிடம் இந்த 6 பழக்கங்கள் இருக்குமாம்!! உங்க கிட்ட இருக்கா?

அதன்படி இளம் ஜோடிகள், அதாவது புதுமண தம்பதிகள் வாஸ்துவின் படி செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகள் பற்றியும், அவர்களின் உறவு வலுவடைந்து அவர்களின் காதல் மேலும் ஆழமடைவது பற்றியும் பார்க்கலாம்.
 

செய்ய வேண்டியவை:

  • புதுமண தம்பதிகள் தங்கள் படுக்கை அறையை எப்போதும் வடக்கில் இருப்பதே உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை படுக்கை அறையுடன் குளியலறை வைத்தால் அது மேற்கு திசை நோக்கி இருக்க வேண்டும்.
  • படுக்கை அறையில் ஒருவர் தூங்கும் போது அவரது தலை தெற்கு பக்கம் இருக்க வேண்டும்.
  • மரத்துடன் தொடர்புடைய ஆற்றல் சூடாக இருப்பதால் படுக்கையை மரத்தால் செய்ய வேண்டும். அவை குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது.
  • அறையில் டிரெஸ்ஸிங் டேபிள் வடக்கு அல்லது கிழக்கு வைக்க வேண்டும். அறையில் உள்ள கண்ணாடி ஒருவர் தூங்கும் போது அவர் மீது எதிர்கொள்ளக்கூடாது. அது அசுபமாக கருதப்படுகிறது.

செய்யக்கூடாதவை:

  • படுக்கை அறைக்கு மேல் கான்கிரீட் இருக்கக்கூடாது.
  • தூங்கும் அறையில், தெய்வத்தின் சிலை அல்லது புகைப்படத்தை வைத்திருக்கக் கூடாது.
  • படுக்கைக்கு எதிரே கண்ணாடி போன்ற பிரதிபலிப்பு இருக்கக் கூடாது.
  • தம்பதிகள் தூங்குவதற்கு இரண்டு தனி தனி மெத்தைகள் இருக்கக் கூடாது.
  • அறையில் அதிக எலக்ட்ரானிக் பொருட்கள் வைத்திருப்பதை தவிர்க்கவும்.
  • அறையில் செயற்கை பூக்களை வைத்திருப்பதை தவிர்க்கவும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Success: பொன், பொருள், புகழ் உடனே கிடைக்க எளிய வழி.! நினைத்ததை நடத்தி காட்டும் எளிய பரிகாரங்கள்.!
Dream Home: இனி நீங்க வீட்டிற்கு வாடகை கொடுக்க தேவையில்லை.! 3 பரிகாரங்களை செய்தால் மூன்றே மாதத்தில் சொந்த வீடு.!