பெண் குழந்தைகளை 'கன்னிமார் சாமி'யாக வழிபட இப்படி ஒரு பின்னணியா?  

By Kalai Selvi  |  First Published Oct 24, 2024, 4:37 PM IST

 Kannimar Sami : பெண் குழந்தைகளை கன்னிமார் சாமியாக கருதி சிறப்பு வழிபாடு செய்வது ஏன் என்பது பற்றி பலருக்கும் உண்மையான காரணம் தெரிவதில்லை. அது குறித்து இந்த பதில் காணலாம்.  


மனித இனம் தாய் வழி சமூகம் தான். பழங்காலத்தில் மனிதர்களிடையே தாய் வழிபாடு தான் இருந்துள்ளது.  அந்த வரிசையில் ஒரு பெண் மண்ணுலகில் பிறந்து திருமணம் செய்யாமல் கன்னியாகவே இறைவனடி சேரும்பட்சத்தில் அப்பெண்ணை தெய்வமாக வழிபடுவது கிராமங்களில் மரபாக உள்ளது. இது மட்டுமின்றி சிறு வயது பெண் குழந்தைகளையும் 'கன்னிமார்' என கருதி வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.  இந்து மதத்தில் காணப்படும் சக்தி வழிபாடு கூட என்பது தாய்வழி வழிபாடுதான். 

புதிய கற்காலத்தை சேர்ந்த ரிக் வேதத்தில் உள்ள மார்க்கண்டேய புராணம், இலக்கிய ஆளுமையான காளிதாசரின் குமார சம்பவம் போன்றவற்றில் கூட  கன்னிமார்களின் வரலாற்றை புகழ்ந்து சொல்கிறார்கள்.  திருமண தடை நீங்க கன்னிமாரை வழிபடுவர்களும் உண்டு. இவர்களுக்கென்று தனித்த மந்திரங்களோ வழிபாட்டு முறையோ இல்லை என்றே சொல்லப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க:  மரணத்திற்குப் பின் ஆன்மா எங்கு செல்கிறது? உண்மையில் மறுபிறவி என்ற ஒன்று இருக்கா?

எல்லா செயலுக்கும் அறிவியல்ரீதியான காரணங்கள் கண்டறியாத காலங்களில் பெண் குழந்தையை பெற்றெடுப்பதே மனிதனுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கக் கூடும். ஒரு உயிரை அவளால் தோற்றுவிக்க முடிகிறதே என்ற வியப்பு தான் பெண்களை தெய்வமாக வழிபட ஆதி மனிதனை தூண்டியிருக்க வேண்டும். ஏனென்றால் உடல் வலிமையில் பெண்களை விட ஆண்கள் உறுதியானவர்களாக இருந்தாலும் அவர்களால் ஒரு உயிரை பெற்றெடுக்க முடியாது. அந்த வரலாற்றினை போலவே மரபாக இன்றளவிலும் கன்னிமார் வழிபாடு மக்களிடையே காணப்படுகிறது. சிறு பெண் பிள்ளைகளை கொண்டு கூட கன்னிமார் வழிபாடு செய்கிறார்கள். 

இதையும் படிங்க:  வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கணுமா? அப்ப 'இந்த' தப்ப மறந்தும் பண்ணாதீங்க!!

பெண் குழந்தைகளை கன்னிமார்களாக கருதி அவர்கள் காலில் 'பாத அபிஷேகம்' செய்வது வழிபாட்டின் ஒரு பகுதியாகும். இது நிறைவடைந்த பின்னர் சுவாமிகளுக்கு வழிபாடு செய்து வணங்குகின்றனர். இந்த வழிபாட்டின் போது கன்னிமார்கள் மீது பூத்தூவி அவர்களுடைய பாதங்களில் வணங்கி மக்கள் ஆசியும் பெற்று கொள்கின்றனர். இந்த  வழிபாட்டின் மூலம் குலம் தழைக்கும் என நம்பப்படுகிறது. சுமங்கலிகள் கன்னிமாரை வழிபட்டால் அப்போது பிற சுமங்கலிக்கு மங்கல பொருள்களை வழங்கினால் வம்சம் தழைக்குமாம். நோய் நொடியில்லாமல் வாழ ஆசி கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. 

கோயிலுக்கு போகும்போது  சப்த கன்னியர்களையும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இதனால் உங்களுக்கு செல்வமும், தானியமும் பெருகும் என ஆன்மீக பெரியோர் சொல்வர்.  இதன் காரணமாக தான் இன்றளவும் சில கிராமங்களில் விதை நெல் வைத்து சப்த கன்னியரை வழிபடுகிறார்கள்.

click me!