நினைத்தாலே முக்தி தரக் கூடிய சிறப்பான புண்ணிய தலமாக விளங்கக்கூடியது திருவண்ணாமலை. பஞ்ச பூத தலங்களில் இது அக்னி தலமாகவும் விளங்குகிறது. இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம்.
ஆவணி பவுர்ணமியில் எந்த நாளில் எந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நினைத்தாலே முக்தி தரக் கூடிய சிறப்பான புண்ணிய தலமாக விளங்கக்கூடியது திருவண்ணாமலை. பஞ்ச பூத தலங்களில் இது அக்னி தலமாகவும் விளங்குகிறது. இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். இங்குள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் மாதம்தோறும் வரும் பவுர்ணமி அன்று வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு அவரின் அருளை பெற்று செல்வார்கள்.
இந்நிலையில், ஒவ்வொரு மாதம் வரும் பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரத்தை அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பவுர்ணமி இன்று காலை 10.45 மணிக்கு தொடங்கி மறுநாள் 31-ம் தேதி வியாழக்கிழமை காலை 8.19 மணிக்கு நிறைவடைகிறது. இதனால் புதன்கிழமை இரவு கிரிவலம் செல்ல உகந்தது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.