ஆந்திராவில் மகளின் எடைக்கு எடை 51 கிலோ தக்காளியை துலாபாரமாக வழங்கிய தம்பதி!

Published : Jul 18, 2023, 06:13 PM ISTUpdated : Jul 18, 2023, 06:16 PM IST
ஆந்திராவில் மகளின் எடைக்கு எடை 51 கிலோ தக்காளியை துலாபாரமாக வழங்கிய தம்பதி!

சுருக்கம்

தக்காளி விலை உயர்ந்து வரும் சூழலில் 51 கிலோ தக்காளியை துலாபாரமாக கொடுத்ததை கோயிலில் இருந்தவர்கள் வியப்படும் பார்த்தனர்.

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நுகாலம்மா தேவி கோயிலில் ஒரு தம்பதி 51 கிலோ தக்காளியை காணிக்கையாக செலுத்தி வழிபாடு செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஆந்திர மாநிலத்தின் அனகாபல்லி மாவட்டத்தில் ஜக்கா அப்பா ராவ், அவரது மனைவி மோகினி மற்றும் அவர்களின் மகள் பவிஷ்யாவுடன்  ஆகியோர் புகழ்பெற்ற ஞாயிற்றுக்கிழமை நுகாளம்மா கோயிலில் தரினசம் செய்தனர். அப்போது, அந்தத் தம்பதி தங்கள் மகளுக்கு துலாபாரம் வழிபாடு நடத்தினர். மகளின் எடைக்கு எடை  தக்காளியை வழங்கினர்.

காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி ஆசை இல்லை! பெங்களூரு எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் ஹெல்லைட்ஸ்!

ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் சூழில்ல மகளின் எடைக்கு நிகராக 51 கிலோ தக்காளியை பவிஷ்யாவின் துலாபாரமாக அம்மனுக்கு சமர்ப்பித்தனர். தக்காளி விலை உயர்ந்து வரும் சூழலில் அதனை துலாபாரமாக கொடுத்ததை கோயிலில் இருந்தவர்கள் வியப்படும் பார்த்தனர்.

துலாபாரம் வழங்கப்பட்ட தக்காளி கோயிலில் அளிக்கப்படும் அன்னதானத்தில் பயன்படுத்தப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நுகாளம்மா கோயிலில் தினமும அன்னதானம் விநியோகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

“எனது பெற்றோர் துலாபாரம் வழங்க முடிவு செய்தபோது, ​​தக்காளியை வழங்குமாறு நான்தான் பரிந்துரைத்தேன். ஏனெனில் அது தற்போது அனைவருக்கும் கட்டுப்படியாகாது. அதை துலாபாரமாக அளித்ததால் தினசரி அன்னதானத்தின் போது பெரும்பாலான பக்தர்கள் தக்காளியை சாப்பிட முடியும் ”என்று தம்பதியின் மகள் பவிஷ்யா கூறினார்.

ராய்ப்பூர் சாலையில் இளைஞர்கள் நிர்வாணப் போராட்டம்! சமூக வலைத்தளங்களில் வெளியான ஷாக்கிங் வீடியோ!

PREV
click me!

Recommended Stories

மாதத்தில் 3 நாட்கள் வழிபாடு.! 30 நாட்களும் பணவரவு.! அதிர்ஷ்டத்தை தரும் ஆன்மிக பரிகாரங்கள்.!
Spiritual: தடை வந்தா பதறாதீங்க! கற்பூரவள்ளி இலை மாலை வழிபாடு வழிகாட்டும்.!