முருகப் பெருமானைப் பற்றிய 10 வியக்கத்தக்க உண்மைகள்!

Published : Jan 29, 2026, 05:23 PM IST
Amazing Facts About Lord Murugan in Tamil History Secrets Spiritual

சுருக்கம்

Top 10 Facts About Lord Murugan in Tamil History Secrets : முருகப் பெருமானின் பிறப்பு, வேலின் ரகசியம் மற்றும் நாம் அறிந்திராத பல அற்புதமான தகவல்களை இந்தத் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

Top 10 Facts About Lord Murugan in Tamil History Secrets : ஒவ்வொரு ஆண்டும் முருகப் பெருமானுக்கான சூரசம்ஹார நிகழ்வு பிரம்மாண்டமாக கொண்டாடப்படும். ஆனால், ஒரு சில இடங்களில் சூரசம்ஹார நிகழ்வு கொண்டாடப்படுவதில்லை. உதாரணமாக திருத்தணியில் முருகப் பெருமானின் கோபம் தணிந்த நிலையில் அங்கு சூரசம்ஹாரம் கொண்டாடப்படுவதில்லை.

இதே போன்று திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமானுக்கு திருமணம் நடந்த நிலையில் அங்கும் சூரசம்ஹாரம் நடப்பதில்லை. முருகப் பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்த ஸ்தலம் என்பதால் திருமணம் நடக்க வேண்டுபவர்கள் இத்தல இறைவனை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும் என்பது ஐதீகம். முருகப் பெருமான் போரிட்டு 3 இடங்களில் அசுரர்களை அழித்தார். அதில், திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்தார். திருப்பரங்குன்றத்தில் தாரகாசூரனை வதம் செய்தார். கடைசியாக போரூரில் சிங்க முகாசூரனை வதம் செய்தார்.

வள்ளிக்காக கிழவர் வேடம் அணிந்து சென்ற முருகப் பெருமான் – கோவை பழனியாண்டவர் கோயில்!

ஜோதிட ரீதியாக செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் நீங்க அதிகாலை எழுந்து குளித்து முடித்து அருகிலுள்ள முருகன் கோயிலுக்கு இறைவனை வழிபட வேண்டும். அதோடு ஸ்ரீ சுப்பிரமணிய அஷ்டகம் சொல்ல வேண்டும். இதன் மூலம் தோஷம் நீங்கும் என்பது ஐதீகமாக சொல்லப்படுகிறது. ஆறுமுகம் கொண்ட முருகப் பெருமானுக்கு 12 கைகள். இதில் வலதுபுறம் உள்ள 6 கரங்களில் கோழிக்கொசி, அபயகரம், அம்பு, வேல், அங்குசம், வச்சிரம் ஆகியவையும், இடதுபுறம் உள்ள 6 கரங்களில் வில், தண்டாயுதம், மழு, மணி, தாமரை மற்றும் வரமளிப்பதற்கான கை போன்றவை இருக்கும்.

முருகப் பெருமானுக்கு சஷ்டி, விசாகம், கிருத்திகை, செவ்வாய் ஆகிய நாட்கள் மிகவும் உகந்த நாட்கள் ஆகும். சுப்பிரமணிய ஸ்தோத்திரம் படித்தால் சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். முருகப் பெருமான் ஆணவம், மதம், குரோதம், லோபம், கன்மம், மாற்சர்யம் என்று 6 பகைவர்களை அழித்துள்ளார். முருகப் பெருமானுக்கு வேலன், கார்த்திகேயன், குகன், கந்தா, விசாகன், மயில் வாகனன், செந்தில் குமரன், தண்டாயுதபாணி, வடிவேலன், கதிரேசன் என்று 100க்கும் மேற்பட்ட பெயர்கள் உண்டு. அதில் ஒன்று தான் காங்கேயன். முருகப் பெருமான் கங்கையால் தாங்கப்பட்டவன் என்பதால் இந்தப் பெயர் பெற்றுள்ளார். இப்படி ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு விதமான அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன.

கோவை கண்ணம்பாளையம் ஸ்ரீ பழனியாண்டவர் கோயில் – கோவை பழனி கோயில் வரலாறு!

கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவன் என்பதால் கார்த்திகேயன் என்றும், விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன் என்பதால் விசாகன் என்றும், சரவணப் பொய்கையில் உதித்தவன் என்பதால் சரவண பவன் என்றும் அழைக்கப்பட்டுகிறார். முருகப் பெருமான் தனது கையில் உள்ள வேல் ஞானசக்தி என்று பெயர் பெறும். சூரபத்மனை அழிக்க சக்தியிடமிருந்து வேல் பெற்று சூரபத்மனை வதம் செய்தார்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

திருமண பாக்கியம் அருளும் ஸ்ரீ பழனியாண்டவர் – வள்ளிக்காக மாறுவேடத்தில் சென்ற முருகன்!
ஸ்ரீ அழகன் மலை கோயில் – ஓசூர் ஒரு அழகிய ஆன்மீகப் பயணம்!