தினமும் கந்த சஷ்டி கவசம் சொல்வதால் இவ்ளோ நன்மைகள் கிடைக்குமா?  ஒரு நாள் சொல்லி பாருங்க!!

By Kalai Selvi  |  First Published Aug 28, 2024, 1:30 PM IST

Kanda Sashti Kavasam : முருகனின் கந்த சஷ்டி கவசத்தை தினமும் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.


முருகன் தமிழ் கடவுளில் மிகவும் பிரபலமானவர். முருகனை நினைத்தாலே கஷ்டங்கள் சோதனைகள் அனைத்தும் இருக்கிற இடம் தெரியாமல் ஓடிப் போய் விடும் என்பது நம்பிக்கை. முருகனின் அருளை பெற, பாடப்படும் கந்த சஷ்டி கவசத்தை தினமும் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை குறித்து இங்கு விரிவாக நாம் தெரிந்து கொள்ளலாம்.

கந்த சஷ்டி கவசத்தை தினமும் படிப்பதால் நன்மைகள் கிடைக்கும் நன்மைகள் :

Tap to resize

Latest Videos

undefined

தினமும் முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம் பாடுவதால் நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வொரு வேல் காக்கும் என்று சொல்லப்படுகிறது. 

உதாரணமாக சில வரிகள் இங்கே:

கதிர்வேல் இரண்டும் கண்ணிகைக் காக்க!
விதிச்செடி இரண்டும் வேலவர் காக்க!
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க! பேசிய வாய் தனைப் பெருவேல் காக்க!
கன்னம் இரண்டும் கருணை வேல் காக்க!
என் இளங் கழுத்தை இனிய வேல் காக்க!

என்று இப்படியே உடலில் ஒவ்வொரு பாகங்களையும் வேல் காக்க என்று தினமும் சொல்லும்போது, நம்முடைய மனது அந்த அங்கத்தில் நிலைக்கும்.
மனது தியானிப்பதை, நமது மூளை தானாகவே சில வினாடிகள் கூர்ந்து கவனித்து, அந்த பாகத்திற்குரிய மூலிகையின் செயல்பாடு சிறப்படையும். மூளையானது ஒரு நாளைக்கு இருமுறை இப்படி செயல்பட்டு வந்தால், உடலில் இருக்கும் சிறு சிறு குறைபாடுகளை மூளை தாமாகவே சரி செய்துவிடும். 

மனோவைத்திய ரீதியாக உடல் நோய்களைப் போக்க முடியும் என்று தற்காலத்து ஆராய்ச்சியாளர்கள்கள் சொல்லி இருப்பதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். எனவே நாம் தினமும் கந்தசஷ்டி கவசத்தை பாடும் போது நம் உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக நமக்கு இருக்கும். இப்படி பல மனவியல் ரீதியான நன்மைகளை நாம் பெற முடியும்.

இதையும் படிங்க:  டாட்டூ போடலாம்.. அதுக்குன்னு இப்படியா? மார்பகத்தில் முருகன் படம்.. சர்ச்சையில் சிக்கிய பெண்..

பிற நன்மைகள் : 

முருகனின் கந்த சஷ்டி கவசத்தை தினமும் படிப்பதால் நம்முடன் நேர்மறை ஆற்றல் பரவி உடல் சுறுசுறுப்பாக இருக்க உதவும் மற்றும் நாம் செய்யும் அனைத்து செயல்களும் சிறப்பாக இருக்கும். அதுமட்டுமின்றி முருகனின் பெயரால் அனைத்து நவகிரகங்களும் நமக்கு துணை நிற்கும். எதிரிகள் நண்பர்கள் ஆவார்கள். வீட்டில் தரித்திரம், செய்வினை, பில்லி, சூனியம் போன்றவை அடியோடு அழிந்து விடும். 

சொல்லப்போனால், வீட்டில் எதிர்மறை ஆற்றல் நீங்கி, நேர்மறை ஆற்றல் பரவும். லட்சுமி கடாட்சம் வீட்டில் நிறைந்திருக்கும். திருமணத்தடை நீங்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் மன அமைதி உண்டாகும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும் உடலும் வலிமையாக இருக்கும்.

இதையும் படிங்க:  முருகப்பெருமானுக்கு ஏன் 2 மனைவிகள்..? சுவாரஸ்யமான காதல் கதை இதோ..!!

முருகனுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை என்பதால், அந்நாளில் மூன்று முறை கந்த சஷ்டி கவசத்தை படித்தால், நினைத்துக் காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். அதுபோல, சஷ்டி விரதம் நாளிலும் முருகனுக்கு நெய் தீபம் ஏற்றி, கந்த சஷ்டி கவசத்தை படித்தால் நடக்காது என்ற நினைத்த காரியங்கள் கூட விரைவில் நடக்கும். தீய சக்திகளிடமிருந்து விலகி இருக்க கந்த சஷ்டி கவசத்தை படிக்கலாம் கந்த 

சஷ்டி கவசம் என்பது ஒரு சாதாரண பக்தி பாடல் அல்ல என்பதை முதலில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதில் சர்வ சக்திகளும் அடங்கி இருக்கிறது. இப்படி பல அற்புதங்களை செய்யக்கூடிய இந்த மந்திர பாடலை தினமும் மனதார பாடினால், முருகனின் அருள் உங்களுக்கு பூரணமாக கிடைக்கும் மற்றும் அனைத்து விதமான நன்மைகளும் பெறுவீர்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!