உங்களது வீட்டில் வைத்திருக்கும் சில ஓவியங்கள் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். எனவே, வாஸ்து சாஸ்திரப்படி ஏழு குதிரைகள் ஓடும் படத்தை வீட்டின் எந்த திசையில் வைக்க வேண்டும் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
எவ்வளவு தான் உழைத்தாலும் அதற்கான பலன் நமக்கு கிடைக்கவில்லை என்று பலர் வேதனைப்பட்டு வருகின்றனர். மேலும் கடினமாக உழைத்தாலும் அதற்கான சம்பள உயர்வோ அல்லது பதவி உயர்வுவோ கிடைக்காமல் பலர் ஏங்குகின்றனர். இவ்வாறு உங்களை சுற்றி எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருப்பதால் அதனை நேர்மறையாக மாற்றும் சக்தி இருக்கு என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
ஏழு குதிரைகளின் முக்கியத்துவம்:
உங்களையும் உங்கள் வீட்டையும் சுத்தி இருக்கும் எதிர்மறை ஆற்றலை நீக்க நீங்கள் சில விஷயங்களை பின்பற்ற வேண்டும். அதன்படி உங்கள் வீட்டில் ஏழு குதிரைகள் ஓடி வருவது போன்ற புகைப்படங்களை வைப்பதன் மூலம் உங்களுக்கு நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
வாஸ்து சாஸ்திரத்தில் 7ஆம் எண்ணிற்கு பல்வேறு சிறப்புகள் இருக்கிறது. எனவே ஏழு குதிரைகள் ஓடி வருவது போன்ற புகைப்படத்தை உங்கள் வீட்டில் வைத்தால் உங்களது வாழ்வில் செல்வ வளம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், வேலையில் உயர்வு, வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். அதுபோல், உங்களது வீட்டில் சூரிய பகவான் ஏழு குதிரை ரதத்தில் சவாரி செய்யும் படத்தை வீட்டில் வைப்பதன் மூலம் உங்களது வீட்டில் சுபிட்சம் பெருகும்.
ஆகையால், அந்தப் படத்தை உங்களது வீட்டின் கிழக்கு திசையில் வைத்தால் வீட்டில் நல்ல காரியம் நடக்கும். உங்களுக்கு பதவி உயர்வு வேண்டுமெனில் அந்தப் படத்தை வடக்கு திசையில் வைக்க வேண்டும். மேலும் உங்களுக்கு பெயர், புகழ், மரியாதை கிடைக்க வேண்டுமென்றால், உங்களது வீட்டின் தெற்கு திசையில் ஓடும் குதிரைகளின் படத்தை வைக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் கடன் தொல்லையால் கஷ்டப்படுகிறீர்கள் என்றால் ஒரு ஜோடி குதிரை பொம்மைகளை வாங்கி மேற்கு திசையில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் லட்சுமியின் அருள் உங்களது வீட்டில் தங்கும்.
அதுபோல் சிவப்பு நிற பின்னணியோடு இருக்ககும் ஏழு குதிரைகளின் ஓவியம் அதிக மரியாதையை ஏற்படுத்திக் கொடுக்கும். நீல நிறப் பின்னணியில் இருக்ககும் ஏழு குதிரைகள் ஓவியம் நல்லிணக்கத்தையும் அமைதியையும் அதிகரித்துக் கொடுக்கும். நேர்மறை ஆற்றலின் சின்னம் வெள்ளை குதிரைகள் ஆகும். இதற்கு நேர்மறை ஆற்றலை அதிகரிக்கக்கூடிய சக்தி இருப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
இதையும் படிங்க: luck: காலையில் எழுந்ததும் இந்த பொருள்களை பார்த்தால் அதிர்ஷ்டம்... உங்க பாக்கெட்ல பணம் நிரம்பி கொண்டே இருக்கும்
மேலும் இந்த ஏழு குதிரைகளின் ஓவியத்தை உங்களது படுக்கை அறை, பூஜை அறை, படிக்கும் அறை, கழிப்பறையை எதிர்கொள்ளும் சுவர்கள், பிரதான கதவு ஆகியவற்றில் வைக்க வேண்டாம். இந்த ஓவியம் உங்களது வரவேற்பறையில் வைக்கலாம்.