ஆடி மாதத்தில் வரும் ஆடி பூரம் நாள் ஆண்டாளுக்கு மிகவும் உகந்த நாள் என்பதால் இந்நாளில் விரதம் இருந்தால் உங்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் மற்றும் குழந்தை இல்லாதோருக்கு குழந்தை வரம் கிடைக்கும்.
ஆடி மாதத்தில் ஆடிக் கிருத்திகை, ஆடித்தபசு, ஆடி பூரம், ஆடிப் பெருக்கு என பல கொண்டாட்டங்கள் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. அதில் ஆடி பூரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். இந்த நாளில்தான் சக்தி தேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.
ஆடிப்பூர நாளில்தான் அன்னை சக்திதேவியே ஸ்ரீ வில்லிபுத்தூரில் துளசி மாடத்தில் ஆண்டாளாக அவதரித்தார். மேலும் ஆடிப்பூரம் அன்று விரதமிருந்து அம்மனை தரிசித்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் மற்றும் அம்மனுக்கு வளையல் வாங்கிக் கொடுத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதுபோல், ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனை வழிபட்டால் உங்களுக்கு எல்லா நலன்களும் கிடைக்கும்.
பூரம் என்பது இந்து ஜோதிடத்தில் உள்ள 27 நட்சத்திரங்களில் ஒன்றாகும். இந்த நாள் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். இந்த நாளில்தான், சித்தர்களும், முனிவர்களும் தங்களுடைய தவத்தை
தொடங்குவதாக புராணங்கள் கூறுகின்றது. எனவே, இந்த தினத்தில் ஆண்டாளை வழிபடுவதன் மூலம் திருமணமாக பெண்களுக்கு கல்யாண வரம் கிடைக்கும்.
இதையும் படிங்க: Aadi Matham Festival 2023: ஆடி மாதத்தில் வரும் முக்கிய விசேஷங்கள் என்ன? எந்த நாட்களில் வருகிறது தெரியுமா?
ஆடி பூரம் விரதம் ஏன்?
சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரம் பூரம். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுக்கிரனின் தெய்வம் ஆகும். மேலும் ஆடிப்பூரத்தில் பிறந்த ஆண்டாள் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை காதலித்துஅவரையே மணந்தாள். எனவே
மனதிற்கு பிடித்த நபரை கை பிடிக்க சுக்கிரபகவானின் அருள் வேண்டும். அதுபோலவே, சுக்கிரன் அருள் இருந்தால் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். எனவேதான் ஆடி பூரம் விரதம் இருந்தால் நல்ல திருமண வரம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
அம்மனுக்கு வளைகாப்பு நடக்கும் நாளை தான் ஆடிப்பூரம் என்பர். தாய்மை பெண்களுக்கே உரியதான சிறப்பு என்பதால் அம்மனுக்கு இந்த நாளில் வளைகாப்பு நடத்தப்படுகிறது. மேலும் சிவன் கோவிகளில்
அம்மனுக்கு வளைகாப்பு நடக்கும். குழந்தை இல்லாத பெண்கள் அனைவரும், குழந்தை பாக்கியத்திற்காக அம்மனுக்கு நடக்கும் வளைகாப்பு விழாவில் வளையல் வாங்கி கொடுத்து தங்களுக்கும் விரைவில் வளைகாப்பு நடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள். இந்த வளைகாப்பு முடிந்ததும் அம்மனுக்கு அளித்த வளையல்கள் அனைத்தும் கோவிகளில் இருக்கும் பெண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.