Aadi Velli 2024: சக்தி தரும் அம்மன் பாலபிஷேகம் செய்தால் செல்வ வளம் பெருகும்! மாங்கல்ய பலம் கூடும்!!

By Asianet Tamil  |  First Published Jul 12, 2024, 3:37 PM IST

ஆடிமாதம் என்பது அம்மன் கோவில்களுக்கு மிக உகந்தமாதம் ஆகும். இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் தீமிதி திருவிழா, தேர்திருவிழா, என அனைத்து திருவிழாக்களும் நடைபெறும், குறிப்பாக இந்த மாதத்தில் உள்ள ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம். ஆடி வெள்ளிக்கிழமையில் புற்றுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று பாலபிஷேகம் செய்தால்  குலம் தழைக்கும் செல்வ வளம் பெருகும்.


ஆடி மாத தத்துவம்:
ஆடி மாதத்தின் அடிப்படை தத்துவமே ‘உன்னை இயக்கும் அதே சக்திதான், ஆங்காங்கு ஆலயங்களில் வெளிப்பட்டிருக்கிறாள். வெளியே தரிசித்த சக்தியை உனக்குள் காண்பதே பிறந்ததன் பயன்' என்பதுதான். எனவே, இந்த ஆடி மாதம் முழுவதும் அம்மனின் ஆலயங்களில் திருவிழாக்கோலம்தான். ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆடி வெள்ளி:
சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் வரும் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அன்றைய தினங்களில், வீட்டு வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாடுவார்கள்.

Aadi Month 2024 Tamil: சிவன் சக்தியோடு ஐக்கியமான ஆடி மாத புராண கதை.. ஆடியில் இத்தனை சிறப்புகளா?

அம்மனுக்கு நிவேதனம்:
பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்து இறைவனை வழிபாடுவார்கள். பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும்.

மா விளக்கு:
ஆடி வெள்ளிக்கிழமையில் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. ஆடி வெள்ளியன்று மகாலட்சுயை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டால் குடும்ப முன்னேற்றமும், மாங்கல்ய பாக்கியமும் அதிகரிக்கும். ஆடி வெள்ளியன்று குத்துவிளக்கு பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத்துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் இல்லத்தில் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.

Tap to resize

Latest Videos

கடகத்தில் உருவாகும் திரிகிரக யோகம்; இந்த 3 ராசிகளில் ஒருவரா நீங்கள்? அப்போ இனிமேல் ராஜ யோகம் தான்!

click me!