வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷியாம், சரத்குமார், பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் வாரிசு படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வம்சி. அவர் தமிழில் விஜய்யுடன் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் வாரிசு. தில் ராஜு பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா, குஷ்பு, சங்கீதா, சம்யுக்தா, ஷியாம், சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்திற்கு பாடலாசிரியர் விவேக் வசனம் எழுதி உள்ளார். வாரிசு திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் முதல் காட்சி இன்று அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. படம் பார்த்த ரசிகர்கள் படத்தின் விமர்சனங்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
undefined
வாரிசு திரைப்படத்தில் டுவிட்டர் விமர்சனங்கள் இதோ....
வாரிசு டீசண்டான குடும்ப படம். ஸ்டைல், டான்ஸ் என அனைத்திலும் அமர்களப்படுத்தி உள்ளார். ராஷ்மிகாவுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை. விஜய்யின் பலம் என்னவோ அதை அறிந்து சிறப்பாக படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் வம்சி. தமன் இசை சிறப்பாக உள்ளது.
எலெய் இது முழுக்க முழுக்க பீல் குட் மூவி டா. வம்சி எங்க பழைய இளைய தளபதிய கொடுத்ததுக்கு கோடி நன்றி. என்ன அழகா இருக்கார் மனுசன். யோகி பாபு காமெடி சூப்பர். தமன் இசை அல்டிமேட். பேம்லி ஆடியன்ஸ் கொண்டாடப்போரங்க உறுதி. சென்டிமென்ட் ஸீன்ஸ் கூட கனைக்ட் ஆகுது.
வாரிசு இரண்டாம் பாதி முழுவதும் ஆக்ஷன் நிறைந்ததாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் தளபதி விஜய்யின் நடிப்புக்கு கிளாப்ஸ் அள்ளுது. பிளாக்பஸ்டர் ஆவது உறுதி.
வாரிசு, தளபதியின் ஒன் மேன் ஷோ. முதல் பாதி பக்காவாக உள்ளது. இரண்டாம் பாதியில் கிளைமாக்ஸுக்கு முந்தைய காட்சிகளும், கிளைமாக்ஸ் காட்சிகளும் கொஞ்சம் குறைத்து இருக்கலாம். ரசிகர்களுக்கும், பேமிலி ஆடியன்ஸுக்கு சிறந்த படமாக இது இருக்கும்.
வாரிசு படத்தில் டான்ஸ், சண்டைக் காட்சி, ரொமான்ஸ், ஆக்ஷன், பஞ்ச் டயலாக் என எல்லாமே செம்மையா பண்ணிருக்காரு விஜய். இது தளபதியின் ஒன் மேன் ஷோ. படத்தில் தளபதிய பாக்குறதுக்கே புத்துணர்ச்சியா இருந்துச்சு.
வாரிசு பக்கா பேமிலி எண்டர்டெயினர். தளபதி விஜய் கியூட்டாகவும், அழகாகவும் உள்ளார். யோகிபாபுவின் காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. தமனின் பிஜிஎம் வேறலெவல், என்ன துணிவா போனாலும் வாரிசு பார்த்த மன அமைதி கிடைக்காது. இந்த பொங்கல் பிளாக்பஸ்டர் வாரிசு தான்.
வாரிசு படத்தின் பின்னணி இசையில் தமன் பிரிச்சுவிட்டாரு. விவேக்கின் டயலாக்கும், திரைக்கதையும் சர்ப்ரைஸாக இருந்தது. மொத்தமாக வாரிசு சிறந்த பொங்கல் பரிசு.
நீண்ட ஆண்டுகளுக்கு பின் குடும்பங்கள் கொண்டாடும் வாரிசு பொங்கல். இந்த உலகமே உங்கள் ஆட்டத்திற்கு ஆட போறாங்க தலைவா.
இது நம்ம தளபதியின் வாரிசு பொங்கல்.
இதுதவிர ஏராளமான பாசிடிவ் விமர்சனங்களும் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளன.