
இரவுக்கு ஆயிரம் கண்கள் என்கிற தரமான திரில்லர் படத்தை இயக்கிய மு.மாறன், அடுத்ததாக இயக்கி இருக்கும் திரைப்படம் தான் கண்ணை நம்பாதே. உதயநிதி ஸ்டாலின் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் பிரசன்னாவும், ஸ்ரீகாந்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மீசைய முறுக்கு, கோடியில் ஒருவன் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருந்த ஆத்மிகா தான் இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
சிகப்பு மஞ்சள் பச்சை படத்திற்கு இசையமைத்த சித்து குமார் தான் கண்ணை நம்பாதே படத்துக்கு இசையமைத்து உள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் இப்படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்து உள்ளது. தமிழகத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ள இப்படம் எப்படி இருக்கிறது என நமது ஏசியாநெட் தமிழ் சார்பில் எடுக்கப்பட்ட பப்ளிக் ரிவ்யூ வீடியோ இதோ....
அதுமட்டுமின்றி படம் பார்த்த நெட்டிசன்கள் பலரும் கண்ணை நம்பாதே படம் குறித்தும் உதயநிதியின் நடிப்பு குறித்து டுவிட்டரில் தொடர்ந்து பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதனை தற்போது விரிவாக பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... ஜெயலலிதாவின் இறப்பை கிண்டலடிக்கும் காட்சி... உதயநிதி வைக்க சொன்னாரா? - கண்ணை நம்பாதே இயக்குனர் விளக்கம்
படம் குறித்து போடப்பட்டுள்ள டுவிட்டில், நிறைய டுவிஸ்ட்கள் நிறைந்த மிஸ்ட்ரி திரில்லர் படமாக கண்ணை நம்பாதே உள்ளதாகவும், படத்தின் எடிட்டிங் மற்றும் ரன்னிங் டைம் கச்சிதமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி உதயநிதி மற்றும் பிரசன்னா இருவருமே சிறப்பாக நடித்துள்ளதாகவும், இயக்குனர் மாறன் படத்தின் சஸ்பென்ஸை நன்கு கையாண்டு இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு டுவிட்டர் பதிவில், கண்ணை நம்பாதே படத்தின் திரைக்கதை அருமையாக இருப்பதாகவும், நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு ஃபீல் குட் படம் பார்த்த உணர்வு ஏற்படுகிறது என்றும், உதயநிதியின் நடிப்பு நேர்த்தியாகவும் ரசிக்கும் படி இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
படம் பார்த்த நெட்டிசன் போட்டுள்ள மற்றொரு டுவிட்டில், கண்ணை நம்பாதே விறுவிறுப்பான திரைக்கதை உடன் கூடிய சிறந்த கிரைம் திரில்லர் திரைப்படம். உதயநிதி ஸ்டாலினுக்கு மற்றொரு பிளாக்பஸ்டர் படமாக இது அமையும். ஆத்மிகா, பிரசன்னா, சதீஷ், வசுந்தரா ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், நிறைய டுவிஸ்ட்டுகள் நிறைந்த டீசண்ட் ஆன திரில்லர் படமாக கண்ணை நம்பாதே உள்ளது. அதில் சில டுவிஸ்ட்டுகள் முன்கூட்டியே கணிக்கும்படி உள்ளன. நடிப்பு ஓகே, டெக்னிக்கல் ரீதியாக இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம். திரில்லர் படங்களை விரும்புபவர்களுக்கு நிச்சயம் இப்படம் பிடிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... கஷ்டப்படும் காமெடி நடிகை.. கண்டுகொள்ளாத தமிழ் நடிகர்கள்- விஷயம் தெரிந்ததும் ஓடோடி வந்து உதவிய தெலுங்கு ஹீரோஸ்