நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய, பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய இளம் போட்டியாளர்களின் ஒருவர், பிரபல மாடலும், நடிகையுமான சாக்ஷி.
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய, பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய இளம் போட்டியாளர்களின் ஒருவர், பிரபல மாடலும், நடிகையுமான சாக்ஷி.
ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மருமகளாக, 'காலா' படத்தில் நடித்த இவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்துவார் என எதிர் பார்த்த நிலையில் தற்போது டப்பிங் கலைஞராக மாறியுள்ளார்.
இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில், தாற்போது விஷால் மற்றும் தமன்னா நடித்து முடித்துள்ள 'ஆக்ஷன்' படத்தில் தான் டப்பிங் கலைஞராக மாறியுள்ளார் சாக்ஷி. இதனை உறுதி படுத்தும் விதமாக அவரே தன்னுடைய, சமூக வலைதள பக்கத்தில், புகைப்படத்தோடு இந்த தகவலை கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆரம்பத்தில் நடிகர் கவினை இவர் காதலித்தார். இதனை வெளிப்படையாவே தெரிவித்த போதும், இருவருக்குள்ளும் ஒரு சில பிரச்சனைகள் வந்து அந்த காதல் பிரேக் அப் ஆனது அனைவரும் அறிந்தது தான்.
காதல் தோல்வியில் இருந்து மீண்டு, மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்த இவருக்கு தற்போது டப்பிங் வாய்ப்பு வீடு தேடி சென்றுள்ளது. மேலும் இவருடைய ரசிகர்கள் சாக்ஷிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.
A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on Oct 14, 2019 at 3:54am PDT