மதிற்சுவர் அமைக்கும்போது கவனிக்க வேண்டிய வாஸ்து விதிமுறைகள் இதோ...

First Published Nov 13, 2017, 1:55 PM IST
Highlights
Here are the rules that you should look at when building the wall ...


மதிற்சுவர் 

மதிற்சுவர் என்பது ஒரு இடத்தினை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், வாஸ்து படி ஒரு இடத்திற்கும் மற்றொரு இடத்திற்கும் பிரிவை உண்டாக்கி அந்த இடத்தை அதன் தனித்தன்மையுடன் செயல்பட வைக்கிறது. 

மதிற்சுவர் அமைக்கும் போது கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிமுறைகள்.

ஒரு கட்டடம் கட்டும் முன் அதன் மதிற்சுவரின் நான்கு மூலைகளையும் சதுரம் அல்லது செவ்வகமாக இருக்கும்படி சரியாக அமைத்திட வேண்டும்.

கட்டப்படும் கட்டிடம் அடையாள குறியிட்ட மதிற்சுவரின் மூலையிலிருந்து 90 டிகிரி மூலைமட்டம் வரும்படி கட்டடம் கட்ட வேண்டும்.

ஒரு இடத்திற்கு நான்கு திசையிலும் கட்டாயம் மதிற்சுவர் அமைக்க வேண்டும்

தாய்சுவருக்கும், மதிற்சுவருக்கும் இடையே உள்ள காலியிடம் தெற்கு மற்றும் மேற்கு பகுதியை விட வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிகமாக இருக்க வேண்டும்.

மேலும் மதிற்சுவருக்கும், கட்டடத்தின் தாய்சுவருக்கும் இடையே அமைக்கப்படும் இடைவெளி சமமாக இருக்க வேண்டும்.

மதிற்சுவரின் எந்த மூலையும் நீண்டோ அல்லது உடைந்தோ இருக்ககூடாது.

click me!