உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்கணுமா? அப்போ இதையெல்லாம் வீட்டில் இருந்து அப்புறப்படுத்துங்க…

 
Published : Sep 25, 2017, 01:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்கணுமா? அப்போ இதையெல்லாம் வீட்டில் இருந்து அப்புறப்படுத்துங்க…

சுருக்கம்

Do you have wealth in your home? Then remove all this from home ...

உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்க வேண்டுமானால் இவற்றையெல்லாம் வீட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

புறா கூடு

வீட்டில் புறா கூடு இருந்தால், அது வீட்டின் வறுமையை அதிகரித்து, உறுதியற்ற நிலையை ஏற்படுத்தும். எனவே உங்கள் வீட்டில் பணம் சேர வேண்டுமானால், உங்கள் வீட்டினுள் இருக்கும் புறா கூட்டினை வெளியேற்றுங்கள்.

தேன் கூடு

வீட்டினுள் தேன் கூடு இருப்பது ஆபத்தானது மட்டுமின்றி, வீட்டில் வறுமை மற்றும் துரதிர்ஷ்டத்தை ஈர்க்கும். உங்கள் வீட்டில் தேன் இருப்பின், உடனே அதனை வெளியேற்றுங்கள்.

சிலந்தி வலை

வீட்டில் சிலந்தி வலை இருப்பது என்பது வாழ்வில் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறியாகும். எனவே வீட்டில் சிலந்து வலையைக் கண்டால், உடனே அதை சுத்தம் செய்துவிடுங்கள்.

உடைந்த கண்ணாடி

வாஸ்து சாஸ்திரப் படி, உடைந்த கண்ணாடிகளை வீட்டில் வைத்திருப்பது என்பது வீட்டில் வறுமையை அதிகரித்து எதிர்மறை ஆற்றல்களை ஈர்ப்பதாக கருதப்படுகிறது. ஆகவே உங்கள் வீட்டில் ஏதேனும் உடைந்த கண்ணாடி இருப்பின், அதை பத்திரப்படுத்தாமல் உடனே தூக்கி எறிந்துவிடுங்கள்.

வௌவால்

வௌவால் உடல்நல பிரச்சனை, மோசமான சம்பவங்கள், வறுமை அல்லது இறப்பைக் குறிப்பதாக கருதப்படும் ஒன்று. இத்தகைய வௌவால் வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டினுள் நுழைவது கெட்ட சகுணம். எனவே மாலை நேரத்திற்கு பின் வீட்டின் ஜன்னல் கதவுகளை அடைத்துவிடுங்கள்.

விரிசல் 

உங்கள் வீட்டின் சுவர்களில் ஏதேனும் பிளவுகள் அல்லது விரிசல்கள் இருந்தால், அதை உடனடியாக சரிசெய்யுங்கள். ஏனெனில், இம்மாதிரியான சுவர்கள் வீட்டின் அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்திற்கு இடையூறை ஏற்படுத்தி, வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கும். 

அசுத்தமான மொட்டைமாடி

பலரும் வீட்டின் மொட்டை மாடியின் ஒரு மூலையில் பழைய, உபயோகமில்லாத பொருட்களை வைத்து குப்பை போன்று வைத்திருப்பார்கள். நீங்களும் உங்கள் வீட்டின் மொட்டை மாடியில் அப்படி வைத்திருந்தால், உடனே அதை அப்புறப்படுத்துங்கள். ஏனெனில் வாஸ்து சாஸ்திரப்படி, அசுத்தமான மொட்டைமாடி, வீட்டின் வறுமையை மேன்மேலும் அதிகரிக்கும்.

PREV
click me!