வீட்டின் அழகை எக்கச்சக்கமாய் கூட்டும் அலங்காரத் தரைகள்…

First Published Sep 18, 2017, 1:45 PM IST
Highlights
how to increase the beauty of the house


வீட்டின் அழகை எக்கச்சக்கமாய் கூட்டும் தரைகள். வீட்டுக்கு எடுப்பான தோற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும் வண்ணம் டைல்ஸ், மொசைக், மரத்த ரைகள், வினைல் தரைகள், சிமெண்ட் தரைகள், கார்பெட் தரைகள் என பல வகைகளைக் கொண்டு அறையின் தன்மைக்கு ஏற்ப தரைகளை அழகுபடுத்துகிறார்கள்.

அந்த வகையில் தற்போது உடைந்த பாட்டில்களை கொண்டு தரைகளை அழகுப்படுத்தும் முறை கட்டுமானத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது.

கண்ணாடி தரைகள்

கண்ணாடிகளை கொண்டும் தரைகளை அமைக்கலாம். இக்கண்ணாடி தரைகள், மரக்கட்டைகளை கொண்டு அமைக்கப்படும் தரைகளைபோன்றே அமைந்து ள்ளன. இந்த தரைகளை அமைக்க கட்டுமான தளங்களுக்கு ஏற்ப அதன் தடிமன் தேர்வு செய்யப்படுகிறது. கண்ணாடிகள் பொதுவாக வழுக்கும் தன்மை கொண்டவை.

ஆனால் தளத்தில் பதிப்பதற்காகவே பிரத்தியேக முறைகளில் தயாரிக்கப்படும் இக்கண்ணாடி தரைகள் தண்ணீர் மற்றும் பிசுக்கு பொருட்கள் பட்டாலும் வழுக்குவதில்லை. ஏனெனில் வழுக்கு தன்மையை போக்கும் வகையில் இதன் மேற்பரப்புகள் சொரசொரப்பாக மாற்றப்பட்டுள்ளன.

மேலும் தரைகள் அமைப்பதற்காகவே தயாரிக்கப்படும் கண்ணாடிகள் அனைத்தும் அதீத அளவிலான எடைகளை தாங்கும் திறன் கொண்டவையாகவே உருவாக்கப்படுகின்றன.

பாட்டில் தரைகள்

பாட்டில்களை கொண்டு தரைகளை அமைப்பதால் சுற்றுப்புற சூழலுக்கு பெருங்கேடாக அமைந்திருக்கும் வீணாகும் பாட்டில்களை மறுசுழற்சி செய்ய ஏதுவாகிறது. இத்தரைகள் சுற்றுப்புறத்திற்கு பயனுள்ளதாக அமைவதுடன் அறையின் அழகையும் அதிகரிப்பதில் பங்கெடுக்கிறது. மொசைக் மற்றும் கான்கிரீட் போன்றவைகளுடன் சேர்த்து இந்த பாட்டில் தரைகளை எளிதாக அமைத்திடலாம்.

பாட்டில் தரைகளை அமைக்க பிரத்தியேக கருவிகள் தேவைப்படுவதில்லை. பொதுவாக இம்மாதிரியான தரைகள் ரெடிமேட் கற்களாக வும் சந்தைகளில் கிடைக்கின்றன. மேலும் கட்டுமான பணியின்போது இவற்றை எளிமையாக பயன்படுத்த முடியும்.

தேவைப்படும் வண்ணங்களிலும் வடிவங்களிலும் இதனை வடிவமைத்துக் கொள்ளலாம். மக்களின் ரசனைக்கு ஏற்ப பல வடிவங்களில் இந்த பாட்டில் தரைகள் கிடைக்கின்றன.

இதனால் வலுவான பொருட்களை வைத்தாலும் தரைகள் உடைவதில்லை. இத்தகைய கண்ணாடி தரைகள் மீது வண்ண பேப்பர்களை ஒட்டுவது தரைக்கு கூடுதலான அழகினைக் கொடுக்கும்.

அத்துடன் கண்ணாடி தரைகளின் மீது ஏற்படும் கீறல் மற்றும் உராய்வுகளை தடுப்பதாக அமையும். இந்த கண்ணாடி தரைகள் கான்கிரீட் தரைகளை விட பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானவை.

இத்தரைகளில் கறைகள், அழுக்குகள் படிவதில்லை. அதற்கு மாறாக அழுக்குகள் படிந்தாலும் சோப்பு கரைசல்களை கொண்டு எளிமையாக துடைத்து விடலாம். அதனால் கண்ணாடி தரைகளை பராமரிப்பதற்கு எளிதாகவே இருக்கும். கட்டுமானத்தின் புதிய பரிணாமமாக இத்தரைகள் விளங்குகின்றன.

click me!