ஜூம் ஆப் மூலம் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின்..!! அரசுக்கெதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கூறி ஆதங்கம்

By Selva KathirFirst Published Jun 16, 2020, 10:06 AM IST
Highlights

ஒவ்வொரு ஊடகத்தின் அரசியல் பிரிவு செய்தியாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஸ்டாலின் செய்தியாளர்களை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்க உள்ளதால் செய்தியாளர்கள் அவரிடம் கேட்க பல்வேறு கேள்விகளுடன் ஆர்வத்தோடு தயாராகினர். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜூம் ஆப் மூலம்  சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவரிடம் நேரடியாக கேள்வி எழுப்புவதில் தொழில் நுட்பரீதியாக சிரமமிருந்ததால், செய்தியாளர்கள் முன்கூட்டியே சாட்டிங் மூலம் அனுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அவரிடம் நேரடியாக கேள்வி எழுப்ப காத்திருந்த சில செய்தியாளர்களுக்கு இது ஏமாற்றமளித்தது.  நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இணையவழியாகவே பள்ளிக்கூடங்களில் பாடங்கள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில் ஆன்லைன் மூலமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். இதே பாணியில் சென்னையில் ஜூம் ஆப் மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான பாஸ்வேர்ட் ஒவ்வொரு ஊடகத்தின் அரசியல் பிரிவு செய்தியாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஸ்டாலின் செய்தியாளர்களை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்க உள்ளதால் செய்தியாளர்கள் அவரிடம் கேட்க பல்வேறு கேள்விகளுடன் ஆர்வத்தோடு தயாராகினர். 

திட்டமிட்டபடி குறித்த நேரத்திற்கு ஜூம் ஆப் மூலம் செய்தியாளர் சந்திப்பு துவங்கியது. அதில் முன்னணி தொலைக்காட்சிகள், நாளிதழ்கள், வார இதழ்கள் என மூத்த செய்தியாளர்கள் முதல் இளைய தலைமுறை செய்தியாளர்கள் வரை ஸ்டாலினை கேள்வி கேட்க தயாராகினர். ஆனால் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திப்பதற்கு முன்பாகவே திரையில் தோன்றிய  திமுக தலைமை கழக பேச்சாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் செய்தியாளர்களை ஆயத்தப்படுத்தினார், அப்போது செய்தியாளர்கள் ஆர்வத்தின் மிகுதியால் போட்டிப் போட்டுக் கொண்டு கேள்வி எழுப்பும் போது தகவல் தொடர்பு சரியாக அமையாது, எனவே செய்தியாளர்கள் ஸ்டாலினிடம் கேட்க உள்ள கேள்விகளை முன் கூட்டியே டெக்ஸ்ட் மெசேஜாக அனுப்பிவிடுங்கள் , பிறகு அந்த கேள்விகளுக்கு அவர் ஒவ்வொன்றாக பதிலளிப்பார் என கூறினார். அவரிடம் நேரடியாக உரையாடலாம் என காத்திருந்த செய்தியாளர்களுக்கு அது சற்று ஏமாற்றமளிப்பதாக இருந்த்து.

பின்னர் அவர் கூறியது போலவே செய்தியாளர்கள் டெக்ஸ்ட் மெசேஸ் மூலம் கேள்விகளை அனுப்பினர். அதில் பல கேள்விகள் கொரோனா சம்பந்தமாகவே இருந்தது, அதேபோல் கொரோனா வேகமாக பரவும் சூழலில் ஸ்டாலினிடம் எடக்கு மடக்கு கேள்விகளை கேட்டு தலைப்புச் செய்தியாக்க அதிமுக ஆதரவு செய்தியாளர்கள் சிலருக்கு ஆளும் தரப்பில் இருந்து இன்புட் கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் குறித்த நேரத்திற்கு செய்தியாளர்கள் முன்தோன்றிய திமுக தலைவர், செய்தியாளர்களுக்கு வணக்கம் கூறி நலம் விசாரித்தார். பின்னர்  சென்னையில் கொரோனா ஆரம்பித்தது முதல் தற்போது வரையிலான சூழல் குறித்து புள்ளி விவரங்களுடன் அவர் விளக்கினார், தமிழகத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்தது முதல் அது படிப்படியாக எப்படி பரவியது, எங்கு அரசு தவறவிட்டது, திமுக முன்கூட்டியே அரசை எப்படியெல்லாம் எச்சரித்தது  என்பவைகள் குறித்து ஸ்டாலின் தேதி வாரியாக விளக்கினார்.

அவ்வப்போது சில கிராபிக்ஸ் கார்டுகளை காட்டியும், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் சில கோப்புகளை காட்டியும் நோய்பரவலை ஆதாரத்துடன் விளக்கினார். நேரில் கேள்வி கேட்க முடியாது என கூறப்பட்டாலும் சிலர் அவரின் உரை முடிந்தவுடன் அவரிடம் தேவையான சில கேள்விகளை கேட்க காத்திருந்தனர். இறுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 5 கேள்விகள் என்று அவர் செய்தியாளர் சந்திப்பை நிறைவு செய்தார். அதையடுத்து சில நிமிடங்கள் கழித்து செய்தியாளர்கள் ஏற்கனவே டெக்ஸ்ட் மெசேஜாக அனுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். ஆனாலும் திரையில் மூத்த செய்தியாளர்கள் சிலர் கேள்விகளை கேட்க ஆயத்தமாகினர். ஆனால் திட்டமிட்டபடி செய்தியாளர் சந்திப்பு நிறைவு செய்யப்பட்டது. பின்னர் திரையில் தோன்றிய திமுக தலைமை கழக பேச்சாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தலைவர் தற்போது பேசி முடித்துள்ளார், அடுத்த செய்தியாளர் சந்திப்பில் தலைவரிடம்( ஸ்டாலினிடம்) நேரடியாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பலாம் என அவர் கூறினார். 

ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் அதனை தலைவரிடம் கொடுத்து பதிலை பெற்றுத்தாருங்கள் என்று  பெண் பத்திரிகையாளர் ஒருவர் ரவீந்திரனிடம் கேட்டார், பின்னர் ஒரு வாரஇதழ் செய்தியாளர் தளபதியிடம் இந்த கேள்வியை கேட்க முடியுமா என கோரிக்கை வைத்தார் இதனை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தலைவர் விரைவில் வந்து உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என்றார். இறுதியாக செய்தியாளர் சந்திப்பு நிறைவுற்றது. 

 

 

click me!