உங்கள் செல்போன்கள் ஹேக் செய்யப்படலாம்.. "Pink Watsapp" செயலி குறித்து எச்சரிக்கும் சென்னை மாநகர போலீஸ்..

Published : Apr 21, 2021, 01:44 PM IST
உங்கள் செல்போன்கள் ஹேக் செய்யப்படலாம்.. "Pink Watsapp"  செயலி  குறித்து எச்சரிக்கும் சென்னை மாநகர போலீஸ்..

சுருக்கம்

இது தொடர்பாக அடையாறு துணை ஆணையர் விக்ரமன் இட்டுள்ள டுவிட்டர் பதிவில் Pink Watsapp போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்தால் அதன்மூலம் உங்கள் தொலைபேசி HACK செய்யப்பட்டு தகவல்கள் அனைத்தும் திருடப்பட்ட கூடும் என எச்சரித்துள்ளார்.  

"Pink Watsapp" என்ற பெயரில்  பரவும் லிங்குகளால், செல்போன்கள் ஹேக் செய்யப்படுவதாக சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாக "Pink WhatsApp" என்ற பெயரில் உள்ள செயலியை பதிவிறக்கம் செய்யுமாறும் அது Watsapp செயலியின் புதிய அப்டேட் எனவும் பல்வேறு சமூகவலைதளங்களிலும் Watsapp குழுக்களிலும் குறுஞ்செய்திகள் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் சென்னைக் காவல்துறையினர் "Pink Watsapp" என்ற பெயரிலோ அல்லது வேறு ஏதேனும் பெயரிலோ செயலிகளை பதிவிறக்கம் செய்யுமாறு லிங்குகள் கிடைக்கப்பெற்றால் அவற்றை பயன்படுத்தவோ மற்றவர்களுக்கு பகிரவோ வேண்டாம் என தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அடையாறு துணை ஆணையர் விக்ரமன் இட்டுள்ள டுவிட்டர் பதிவில் Pink Watsapp போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்தால் அதன்மூலம் உங்கள் தொலைபேசி HACK செய்யப்பட்டு தகவல்கள் அனைத்தும் திருடப்பட்ட கூடும் என எச்சரித்துள்ளார். இந்நிலையில் இவ்வாறு பரவும் லிங்குகள் மூலம் அச்செயலிகளை தங்களது செல்போனில் இன்ஸ்டால் செய்தவர்களின் செல்போன் நூதன வைரஸ் தாக்கம் ஏற்பட்டு, செல்போனில் உள்ள டேட்டாக்கள் அனைத்தும் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

மேலும், அந்த லிங்கை தொட்டாலே உடனடியாக பதிவிறக்கம் செய்தவர்கள் வாட்ஸ் அப் குழுக்களில் திடிரென பரவுவதாகவும் கூகுள் மற்றும் ஆப்பிள் தளங்களில் கிடைக்கும் அப்ளிகேஷன்களை தவிர்த்து வேறு எந்த ஒரு அப்ளிகேஷனையும்  பயனர்கள் போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டாம் எனவும் சைபர் தொழில்நுட்ப வல்லுனர்களும் எச்சரித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த பிங்க் வாட்ஸப் அப்ளிகேஷன்கள் போனில் உள்ள போட்டோ, செய்திகள் என அனைத்து தரவுகளையும் சைபர் திருடர்கள் திருடுவதாகவும் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

விஜய் கூட்டணிக்கு வராவிட்டால்..? அமித் ஷாவின் ஹிடன் அஜெண்டா..! திமுகவுக்கு பொறி வைக்கும் ஃபைல்ஸ்..!
பாமக பிரச்சனைக்கு திமுக தான் காரணம்.. ராமதாஸை சுற்றி தீய சக்திகள்.. ஒரே போடாக போட்ட அன்புமணி!