பயணிகள் அனைவருக்கும் சானிடைசர் வழங்க முடியாது. 12 முதல் 15 கோடி வரை இழப்பு. போக்குவரத்து துறை செயலர் அதிர்ச்சி

By Ezhilarasan BabuFirst Published Apr 21, 2021, 1:08 PM IST
Highlights

பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் சானிடைசர் வழங்க முடியாது எனவும், இரவு நேர ஊரடங்கு காரணமாக போக்குவரத்து துறைக்கு 12 முதல் 15 கோடி வருமான இழப்பு ஏற்படும் எனவும் போக்குவரத்து துறை செயலாளர் சமயமூர்த்தி அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.  

பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் சானிடைசர் வழங்க முடியாது எனவும், இரவு நேர ஊரடங்கு காரணமாக போக்குவரத்து துறைக்கு 12 முதல் 15 கோடி வருமான இழப்பு ஏற்படும் எனவும் போக்குவரத்து துறை செயலாளர் சமயமூர்த்தி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி  செலுத்தப்பட்டு வருகிறது. இதனை பார்வையிட்ட பிறகு போக்குவரத்து துறை செயலாளர் சமயமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், 

45 வயதுக்கு மிகுந்த பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. ஒரு ஓட்டுனர், நடத்துனருக்கு வந்தால் அது பயணிகள் அனைவரையும் பாதிக்கும் என்பதால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறதாக கூறினார். மொத்தம் 70 ஆயிரம் ஓட்டுனர், நடத்துனர்கள் உள்ளதாகவும், இணை நோய் உள்ள ஓட்டுனர், நடத்துனர்களுக்கு பரிசோதனைக்கு பின் தடுப்பூசி போடப்பட்டு வருவதாக கூறினார். இதுவரை 37% பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பபட்டுள்ளதாகவும் கூறிய அவர், பேருந்து முழுவதும் மட்டுமே கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும் என்று கூறினார். 

ஆனால், பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் கிருமிநாசினி கொடுப்பது சாத்தியமில்ல என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழக அரசு பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் சானிடைசர் வழங்கப்படும் என்று கூறிய நிலையில், போக்குவரத்து துறையின் இந்த பதில் முரணாக உள்ளது. மேலும், இரவு நேர ஊரடங்கால் நேற்று மட்டும்  தமிழகம் முழுவம் 16284 பேருந்துகளும், 2790 மாநகர பேருந்துகளும் சென்னையில் இயக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர். இரவு நேர ஊரடங்கின் காரணமாக 12 முதல் 15 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படலாம் என்றார், இரவு ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்பட்டது SETC பேருந்துகள் தான் என்றார்.
 

click me!