நீங்க கர்நாடகாவில் யாரையெல்லாம் ப்ளாக்மெயில் பண்ணீங்கன்னு பட்டியல் இருக்கு.. அண்ணாமலையை அலறவிடும் ஆ.எஸ்.பாரதி

Published : Mar 29, 2022, 09:31 PM IST
நீங்க கர்நாடகாவில் யாரையெல்லாம் ப்ளாக்மெயில் பண்ணீங்கன்னு பட்டியல் இருக்கு.. அண்ணாமலையை அலறவிடும் ஆ.எஸ்.பாரதி

சுருக்கம்

 கர்நாடகாவில் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க தமிழகத்திலிருந்து அன்றைய ஆட்சியாளர்கள் மூலம் எவ்வளவு பணம் சென்றது என்கிற விவரங்கள் எங்களுக்குத் தெரியும். அப்போது நீங்கள் அங்கு காவல் துறை உயரதிகாரியாக இருந்தீர்கள். 

நீங்கள் (அண்ணாமலை) என்னென்ன செய்தீர்கள், யாரையெல்லாம் ப்ளாக்மெயில் செய்தீர்கள் குறித்த பட்டியல் என்னிடம் இருக்கிறது என்று திமுக எம்.பி.யும் அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ். பாரதி எச்சரித்துள்ளார்.

திமுக நோட்டீஸ்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாய் பயணம் மேற்கொண்டார். அவருடைய பயணத்தை விமர்சித்த அண்ணாமலை, ரூ.5 ஆயிரம் கோடியை முதலீடு செய்வதற்காக முதல்வர் எடுத்து சென்றார் என்று பேசியிருந்தார். அண்ணாமலையின் பேச்சால் கோபமடைந்த திமுக, ‘உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை 24 மணி நேரத்தில் மன்னிப்பு கோர வேண்டும் இல்லையென்றால் ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி எச்சரித்திருந்தார்.

அண்ணாமலை பதிலடி

திமுகவின் இந்த வழக்கறிஞர் நோட்டீஸ் குறித்து இன்று கருத்து தெரிவித்த அண்ணாமலை, “திமுக அரசுக்கு தைரியம் இருந்தால், திராணி இருந்தால் என்னைக் கைது செய்யட்டும். அடுத்த ஆறு மணி நேரத்துக்கு பா.ஜ.க அலுவலகத்தில்தான் இருப்பேன். தொட்டம்பட்டியிலிருந்து வந்த என்னை தொட்டுப் பார்க்கட்டும்” என்ரு அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் ஆர்.எஸ். பாரதி எம்.பி. இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அண்ணாமலை அரசியல் பக்குவம் இல்லாமல் பேசிவருகிறார். அவர் பொறுப்புடன் பேச வேண்டும். திமுகவை தொடர்ந்து திட்டிப் பேசிக்கொண்டிருந்தால் பாஜகவில் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் அண்ணாமலை தொடர்ந்து இவ்வாறு பேசுகிறார்.

ஆர்.எஸ். பாரதி எச்சரிக்கை

நீங்கள் (அண்ணாமலை) என்னென்ன செய்தீர்கள், யாரையெல்லாம் ப்ளாக்மெயில் செய்தீர்கள் குறித்த பட்டியல் என்னிடம் இருக்கிறது. நான் சொல்வதை உங்களால் ஒப்புக்கொள்ள முடியவில்லை என்றால் என் மீது வழக்கு போடுங்கள். நீதிமன்றத்தில் நிரூபிக்கிறேன். கர்நாடகாவில் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க தமிழகத்திலிருந்து அன்றைய ஆட்சியாளர்கள் மூலம் எவ்வளவு பணம் சென்றது என்கிற விவரங்கள் எங்களுக்குத் தெரியும். அப்போது நீங்கள் அங்கு காவல் துறை உயரதிகாரியாக இருந்தீர்கள். எனவே கொஞ்சம் எச்சரிக்கையோடு இருங்கள். முதல்வரும், அவருடன் சென்றவர்களும் கோடி கோடியாகப் பணத்தை கொண்டு சென்றிருந்தால் ஒன்றிய அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டியதுதானே? அந்த அதிகாரம் ஒன்றிய அரசுக்கு இருக்கே? யாரை ஏமாற்ற நினைக்கிறார் அண்னாமலை? தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கெல்லாம் அரசியல் புரியாது என நினைத்துக் கொண்டிருக்கிறாரா?” என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!