கோவில்களுக்கு சென்று தான் வழிபட வேண்டும் என்றில்லை.. மனதிலேயே கூட தெய்வத்தை வழிபடலாம்- பிரகாஷ்.

By Ezhilarasan BabuFirst Published Apr 14, 2021, 1:04 PM IST
Highlights

கொரோனா மிக வேகமாக பரவுவதால் பொது இடங்களில் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், கோவில்களுக்கு நேரில் சென்று தான் வழிபட வேண்டும் என்றில்லை, மனதிலேயே கூட தெய்வத்தை வழிப்படலாம். 

கோவில்களுக்கு நேரில் சென்று தான் வழிபட வேண்டும் என்றில்லை, மனதிலேயே கூட  தெய்வத்தை வழிபடலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை தி நகர் பகுதியில் கொரோனா காய்ச்சல் சிறப்பு முகாம்கள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆயிரம் தன்னார்வர்வலர்கள் வீடு வீடாக ஆய்வு பணிகளில் ஈடுபடவுள்ளனர். அறிகுறிகள் உள்ளவர்களை கண்டறிந்து காய்ச்சல் முகாம்களுக்கும் கொரோனா  பரிசோதனை மேற்கொள்ளவும் அழைத்துச் செல்கின்றனர். 

தொடக்க நிலையிலேயே கண்டறிந்து கட்டுப்படுத்த இந்த முறை உதவுகிறது என்று தெரிவித்தார். ஓரிரு நாட்களில் 12 கொரோனா தனிமைப்படுத்தும் மையங்கள் செயல்பாட்டுக்கு வந்துவிடும். தற்போது 3  மையங்கள் தயாராக உள்ளன. கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளவர்களுக்கு மட்டும் இங்கு சிகிச்சை அளிக்கப்படும். சென்னையில் முன்களப்பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட 22 லட்சம் பேரில், 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது பொதுமக்கள் தயக்கமும் பயமும் இன்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்துவதை தேசிய கடமையாக நினைக்க வேண்டும் என்றார். 

கொரோனா மிக வேகமாக பரவுவதால் பொது இடங்களில் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், கோவில்களுக்கு நேரில் சென்று தான் வழிபட வேண்டும் என்றில்லை, மனதிலேயே கூட தெய்வத்தை வழிப்படலாம். 15 நாட்களுக்கு தேவையான தடுப்பூசி  மருந்துகள் கைவசம் தயாராக உள்ளது. மொத்தமுள்ள 10 லட்சம் தடுப்பூசிகளில் கோவிஷீல்ட் 80% கோவேக்சின் 20% உள்ளது. முன்களப்பணியாளர்கள் 230 பேர் தற்போது கொரோனா தொற்றால் பாதிப்பு. முன்களப்பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதனால், இவர்களில் பாதிக்கப்படுபவர்கள் மிக குறைவு என்று தெரிவித்தார்.
 

click me!