தேவேந்திர குல வேளாளர் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்... வாக்குறுதியை நிறைவேற்றிய மோடி..!

By Thiraviaraj RMFirst Published Apr 14, 2021, 12:26 PM IST
Highlights

தமிழகத்தில், ஏழு ஜாதி பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அழைக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
 
தமிழகத்தில், தேவேந்திர குலத்தான், குடும்பன், பள்ளன், கடையன், காலாடி, பண்ணாடி, வாதிரி ஆகிய உட்பிரிவுகளில் இருக்கும் மக்கள் தங்களை, 'தேவேந்திர குல வேளாளர்' என, ஒரே பெயரில் அழைக்க வலியுறுத்தி வந்தனர். இக்கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியது.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தமிழகம் வந்தபோது, இது தொடர்பாக வாக்குறுதி அளித்திருந்தனர். அவர் அளித்த வாக்குறுதியின்படி, இதற்கான சட்ட திருத்த மசோதாவை, நாடாளுமன்றத்தில் மக்களவையில் தாக்கல் செய்து, மத்திய அரசு நிறைவேற்றியது. அதனை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், ஜனாதிபதி இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் மசோதா சட்டமாகியுள்ளது.

click me!