கர்ணன் படத்தை பார்க்காதே... போ போ போய் இ.வி.எம் மெஷினை பாரு... உதயநிதிக்கு அட்வைஸ்..!

By Thiraviaraj RMFirst Published Apr 14, 2021, 12:04 PM IST
Highlights

தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை பற்றி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்ட பதிவுக்கு, கர்ணன் படத்தை பார்ப்பதற்கு பதில் போய் இ.வி.எம் இயந்திரத்தை பாருங்கள் என பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. 

தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை பற்றி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்ட பதிவுக்கு, கர்ணன் படத்தை பார்ப்பதற்கு பதில் போய் இ.வி.எம் இயந்திரத்தை பாருங்கள் என பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. 

மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படம் சாதிய குறிகளுடன் வெளியானது. அடுத்து அவர் இயக்கிய  கர்ணன் படமும் சாதிய கோட்பாடுகளுடன் வெளியாகி பரவலான விமர்சனங்களை பெற்று வருகிறது.  இந்நிலையில் திமுகவினரும், அதன் கூட்டணி கட்சியினரும் இப்படத்தை தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்தப்படத்தை பார்த்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷுக்கும், அண்ணன் தானுவுக்கும், இயக்குநர் மாரிசெல்வராஜுடனும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.

‘கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் ,அண்ணன் , இயக்குநர் மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.

— Udhay (@Udhaystalin)

 

1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி.’’ எனத் தெரிவித்துள்ளார்,.

இதற்கு பதிலளித்துள்ள நெட்டிசன்கள், ‘’அப்படியே மாஞ்சோலை தேவேந்திர குல வேளாளர் தொழிலாளர்களை படுகொலை செய்ய உத்தரவிட்டது உன் தாத்தா திமுக ஆட்சியில் தானே. அடுத்த படத்தில் அதை பற்றி சரியாக படம் எடுப்பார்கள் கவலைபடாதே'’ எனவும்,  அவ்வளோ தான் போ போ போய் EVM machine ah பாரு போ'’ எனவும் பதிலடி கொடுத்துள்ளனர்.

click me!