வீட்டைவிட்டு போன மகள் வீடு திரும்பவில்லை.. காவல் துறையிடம் கதறிய பாமக நிர்வாகி.

By Ezhilarasan BabuFirst Published Apr 14, 2021, 11:53 AM IST
Highlights

மேலும், அதனை அடுத்து திருமங்கலம் காவல் நிலையத்தில் மகள் சித்ராதேவி காணவில்லை எனப் புகார் கொடுத்தோம், ஆனால் இதுவரையிலும் அவர் குறித்து எந்த தகவலும் இல்லை, இதே வேளையில் எனது மகளுக்கு ஆரம்பத்திலிருந்தே வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

வீட்டை விட்டு வெளியே சென்ற மகள் வீடு  திரும்பவில்லை என்றும், மாயமான தனது மகளை பத்திரமாக மீட்டு தரவேண்டும் எனவும் காவல் நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகி புகார் கொடுத்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கண்ணையா (63) இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் திருமங்கலம் தெற்கு மாவட்ட துணை செயலாளராக உள்ளார். இந்நிலையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அவர் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். 

அதில், தன்னுடைய மூத்த மகள் சித்ராதேவி திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும்,  இந்நிலையில் தனது வீட்டிற்கு அருகிலேயே வாடகை வீடு எடுத்து வசித்து வரும் அவர், தனியார் பள்ளி ஒன்றில் யோகா ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் எனவும், அதேபோல வீட்டிற்கு அருகில் உள்ள குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் யோகா பயிற்சியும் கொடுத்து வருகிறார் என்றும், இந்நிலையில் கடந்த 2-4- 2021 அன்று காலை இருசக்கர வாகனத்தில் வீட்டைவிட்டு கிளம்பி. அவர் அன்று இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை என்றும், பல இடங்களில் தேடியும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும்  கூறியுள்ளார்.

மேலும், அதனை அடுத்து திருமங்கலம் காவல் நிலையத்தில் மகள் சித்ராதேவி காணவில்லை எனப் புகார் கொடுத்தோம், ஆனால் இதுவரையிலும் அவர் குறித்து எந்த தகவலும் இல்லை, இதே வேளையில் எனது மகளுக்கு ஆரம்பத்திலிருந்தே வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார். எனவே அவரை பிடித்து விசாரணை நடத்தினால் உண்மை தெரியவரும், நானும் ஹிரிகிருஷ்ணனை தொடர்பு கொண்டு பேசினேன், அதற்கு  அவர் உங்கள் மகளை நான்தான் கடத்தி வைத்துள்ளேன். உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்று  கூறிகிறார். 

எனவே ஹரி கிருஷ்ணன் மீது தக்க நடவடிக்கை எடுத்து என் மகளை பத்திரமாக மீட்டுத் தரவேண்டும் என கன்னையா அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.  மகள் காணாமல் போனதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

click me!