
ஒரு வாரத்துக்கு ரெஸ்டில் இருக்க வேண்டும், டிவி பார்க்கக் கூடாது. குறிப்பாக இரவு நேரங்களில் பார்க்கவே கூடாது என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர்கள் அட்வைஸ் செய்திருக்கிறார்கள்.
“கண்ணில் புரை நீக்க அறுவை சிகிச்சை செய்திருப்பதால், ஒரு வாரத்துக்கு ரெஸ்டில் இருக்க வேண்டும் என முதல்வருக்குச் சொல்லப்பட்டிருக்கிறதாம். குறிப்பாக டிவி பார்க்கக் கூடாது என்பது அவருக்கு டாக்டர்கள் கொடுத்த அட்வைஸ் பண்ணியிருக்கிறார்கள்.
வழக்கமாக இரவு 8 மணிக்குப் பிறகு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளைத் தவறாமல் பார்ப்பாராம் பழனிசாமி. விவாதங்களில் பங்கேற்றுப் பேசும் அதிமுக செய்தித் தொடர்பாளர்களிடம் நிகழ்ச்சி முடிந்த பிறகு போன் செய்து சில கரெக்ஷன்களைச் சொல்வாராம்.
ஆனால், கடந்த ஒரு வாரமாக தொலைக்காட்சி பார்க்கவில்லை, ஆனாலும் ஆடியோ மட்டும் வைத்து விவாதங்களை கேட்டுக்கொண்டிருக்கிறாராம் எடப்பாடியார். அதேபோல நேரடியாக யாரிடமும் போன் பேசாமல், தான் சொல்ல நினைப்பவற்றைத் தன் உதவியாளர் கார்த்திகேயனிடம் சொல்லிவருகிறாராம்.
மேலும், முதல் அமைச்சர் கண் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருப்பதால், விவசாயிகள் போராட்டத்தைத் தள்ளி வைப்பதாக சொல்லி இருந்தார்கள். அந்த சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் முதல்வரின் உதவியாளர் போன் போட்டு. ‘சி.எம். உங்களுக்கு நன்றி சொல்ல சொன்னாரு...’ என்று சொல்லியிருக்கிறார்.