என்னது டீ, பிஸ்கெட்டுக்கு 68 லட்சம் ரூபாய் செலவா ? அதுவும் ஒன்பது மாசத்திலே  !!

First Published Feb 7, 2018, 9:22 AM IST
Highlights
tea and buiscut expenses for uttrakant is 68 lakhs


உத்தராகாண்ட் மாநில முதலமைச்சராக  பதவியேற்றுக் கொண்ட  பாஜகவைச் சேர்ந்த திரிவேந்திர சிங்,  தான் பதவியேற்ற ஒன்பது மாதங்களில் டீ மற்றும் ஸ்நாக்ஸ் வகையறாக்களுக்கு மட்டும் 68 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின்  முதலமைச்சராக  பதவி வகித்து வருபவர் பாஜகவைச் சேர்ந்த திரிவேந்திர சிங் ராவத். இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம்  அம்மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்..



இந்நிலையில்  ஹேமந்த் சிங் குனியா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், முதலமைச்சர்  அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் பதவியேற்றது முதல் டீ மற்றும் ஸ்நாக்ஸ் வகைகளுக்கு எவ்வளவு பணம் செலவிட்டுள்ளது என கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

இந்நிலையில், முதலமைச்சர்  திரிவேந்திர சிங் அரசு, கடந்த 9 மாதத்தில் மட்டும் டீ மற்றும் ஸ்நாக்சுக்கு என மொத்தம் 68 லட்சத்து 59 ஆயிரத்து 865 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என பதில் தெரிவித்துள்ளது.



அதாவது  அமைச்சர்கள்  மற்றும் அவர்களது துறை அதிகாரிகள், அந்தந்த துறைகளுக்கு வரும் விருந்தினர்களுக்கு என டீ மற்றும் ஸ்நாக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

மேலும், ஜனதா தர்பார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் ஆகியவற்றின் போதும் டீ மற்றும் ஸ்நாக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.  முதலமைச்சர் உத்தரவின்படியே இவை வழங்கப்பட்டு வருகிறது என  அம்மாநில தலைமைச் செயலக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இதேபோல், இதற்கு முன்பு முதலமைச்சராக இருந்த  ஹரீஷ் ராவத், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல்   2016 ஆம் ஆண்டு வரை தனது  முதலமைச்சர்  அலுவலகத்தில் டீ மற்றும் ஸ்நாக்ஸ் வகைகளுக்கு என  1 கோடியே 50 லட்சம் ரூபாய்  செலவிடப்பட்டிருந்தது தகவல்  அறியும் உரிமை சட்டம் வாயிலாக தெரிய வந்துள்ளது/

click me!