
உத்திர பிரதேச மாநில முதல்வராக யோகி ஆதித்யா நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் .லக்னோவில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது .
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 325 தொகுதிகளில் பா.ஜ.கஅமோக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது யோகி ஆதித்யாநாத்தை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
மேலும் கடும் போட்டிக்கிடையில் துணை முதல்வராக மவுரியா, மற்றும் தினேஷ்சர்மா ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உத்திர பிரதேச மாநில முதல்வராக யோகி தேர்வு செய்வதற்கு முன்னதாக, கேசவ் மவுரியாவுக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட நிலையில் , யோகி ஆதித்யாநாத்தை தேர்வு செய்துள்ளது மத்தியில் ஆளும் பாஜக .
யோகி ஆதித்யாநாத் , கோரக்பூர் பகுதியில் இருந்து லோக்சபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். மேலும் கோர்காநாத் மடத்தின் சாமியாராகவும் இருந்து வரும் இவர், பார்லிமென்டேரியன் என பெயர் பெற்றவர். இவரது பேச்சு அனல் பறக்கும் விதமாக இருக்கும் என்பதால் இந்த பட்டப் பெயர் பெற்றுள்ளார்