கருணாநிதி கல்லறையில் மிகுந்த பரபரப்பு...!! திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஸ்ட்ரைட்டா வீடியோகால் போட்ட தொண்டர்...!! மனமுருக பேசி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்...!!

By Ezhilarasan BabuFirst Published Oct 3, 2019, 7:32 AM IST
Highlights

வீடியோகால் மூலம் தங்களுடன் உரையாட விரும்புகிறார், அவருடன் நீங்கள் உரையாட வேண்டும் என்று கோரினர்.  அதற்கு மறுப்பேதும் சொல்லாமல் உடனே சம்மதித்த்திமுக தலைவர்  ஸ்டாலின், வீடியோ கால் மூலம் சுந்தர வடிவழகனுடன் உரையாடினார். 

ஓமன் நாட்டில் பணியாற்றுவரும் தீவிர திமுக விசுவாசியுடன்  திமுக  தலைவர் ஸ்டாலின் வீடியோ காலில் உரையாடி சம்பவம் அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று மாலை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதியின்  நினைவிடத்திற்கு சென்றிருந்தார், அப்போது அவருடன் டிகேஎஸ் இளங்கோவன், தயாநிதிமாறன், உள்ளிட்ட திமுக முன்னணி தலைவர்கள் உடன் இருந்தனர்.  அப்போது சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார்-ஞானாம்பிகை என்ற தம்பதியினர் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த அவர்களது உறவினர்களும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தை காண வந்திருந்தனர். அப்போது ஞானாம்பிகை திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலினை பார்த்து கையசைத்தார், அதைக்கண்ட ஸ்டாலின் அவர்களை அருகில் அழைத்து பேசினார். 

இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினிடத்தில் இடத்தில் அன்பு கோரிக்கை ஒன்று வைத்தனர், திமுகவின் தீவிர விசுவாசியான தங்களது மாமா, டாக்டர். சுந்தர வடிவழகன் ஓமன் நாட்டில் பேராசிரியராக பணியாற்றுவதாகவும் அவர் வீடியோகால் மூலம் தங்களுடன் உரையாட விரும்புகிறார், அவருடன் நீங்கள் உரையாட வேண்டும் என்று கோரினர்.  அதற்கு மறுப்பேதும் சொல்லாமல் உடனே சம்மதித்த்திமுக தலைவர்  ஸ்டாலின், வீடியோ கால் மூலம் சுந்தர வடிவழகனுடன் உரையாடினார்.  இதனால் சுந்தர வடிவழகன் மற்றும் அவரது உறவினர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். 

திமுக தலைவர் ஸ்டாலினுடன் உரையாடியது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுந்தரவடிவழகன் திமுக தலைவருடன் பேசியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, மறைந்த தலைவர் கருணாநிதிக்கு பின்னர்  திமுகவை திறம்பட ஸ்டாலின் வழிநடத்தி வருகிறார்  என புகழாரம் சூட்டினார். தொண்டரின் வேண்டுகோளை ஏற்று வெளிநாட்டிலுள்ள மற்றொரு திமுக தொண்டருடன் ஸ்டாலின் வீடியோ காலில் உரையாடியிருப்பது திமுக தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!