ஆமாம் எங்களுக்கும் அதே சந்தேகம் தான்... பகீர் கிளப்பும் பாலகிருஷ்ணன்!!

By sathish kFirst Published May 27, 2019, 2:54 PM IST
Highlights

தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட துணை முதல்வர் பன்னீரின் மகன் ரவீந்திரநாத் பெற்ற வெற்றி பற்றிய சந்தேகம் எங்களுக்கும் உள்ளது என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட துணை முதல்வர் பன்னீரின் மகன் ரவீந்திரநாத் பெற்ற வெற்றி பற்றிய சந்தேகம் எங்களுக்கும் உள்ளது என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி தேனி தொகுதியைத் தவிர அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவிய நிலையில், தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை விட 76,693 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

ஆனால், இது முறைகேடாகப் பெற்ற வெற்றி என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பன்னீர்செல்வம் தனது மகன் வெற்றிக்காக சுமார் 500 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளார் என்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியிருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “தமிழ்நாடு முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றிபெற்றிருக்கும்போது தேனி ஒரு தொகுதியில் மட்டும் ரவீந்திரநாத் வெற்றிபெற்றிருக்கிறார். இது எங்களுக்கு சந்தேகமா இருக்கு, அவர் எப்படி வெற்றிபெற்றார் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். 

ஏற்கனவே தேனியில் பண விநியோகம், விதிமுறை மீறல்கள் நடைபெற்றன. இன்னும் சொல்லப் போனால் வாக்கு எண்ணிக்கையில்கூட முரண்பாடுகள் இருப்பதாகத் தகவல்கள் வந்திருக்கிறது. இதை உரிய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதில் தவறு ஏதும் கிடையாது என்று இவ்வாறு அதில் தெரிவித்தார்.

click me!