சாக்கடையிலும் தண்ணீரிலும் கலக்கிற சமூகம்தான்.. திருமா இருக்கையில் நடந்தது குறித்து வன்னி அரசு விளக்கம்.

By Ezhilarasan BabuFirst Published Nov 30, 2021, 2:36 PM IST
Highlights

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் சென்னை மூன்று முறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.  சாலைகள் குடியிருப்புகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது.

தண்ணீரில் கால் வைத்தால் வீக்கம் அதிகரிக்கும் என்ற பிரச்சினை இருப்பதாலும், நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் ஒரு தலைவரால் எப்படி தண்ணீரில் நனைந்தபடி எப்படி செல்ல முடியும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இருக்கையில் நடந்து சென்ற விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் சென்னை மூன்று முறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.  சாலைகள் குடியிருப்புகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் மழைநீரில் காலனி நனையாமல் இருக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியை அவரை இருக்கையின் மீது ஏற்றி காருக்குள் அனுப்பிய நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வேளச்சேரியில் உள்ள வீட்டில் இருந்து டெல்லி புறப்பட  தயாராக இருந்த நிலையில் அவரது வீட்டை சுற்றி தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது, அப்போது அக்கட்சி தொண்டர்கள் பார்வையாளர்கள் அமரும் இருக்கைகள் மீது அவரை ஏற்றி நடக்க வைத்து பின்னர் காருக்குள் அனுப்பினார். இதற்கான வீடியோ அக்காட்சியின் இணையதள பிரிவு வெளியிட்டிருந்தது. இந்த வீடியோ பார்த்த பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மழை தண்ணீரில் கூட இறங்கி நடக்க  தயங்குபவர்கள் எப்படி ஒரு தலைவராக இருக்க முடியும் என்றும், அவர் இருக்கையில் ஏறி நிற்க தொண்டர்கள் அவரை  தண்ணீரில் நின்றபடி தாங்கி செல்கின்றனர். இது ஒருவிதமான எதேச்சதிகாரம், இதுதான் சமூக நீதியா என்றெல்லாம் அவரை விமர்சித்தனர். 

தற்போது இது விவாத பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் இது குறித்து அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் இருக்கின்ற தலைவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு இருக்கிறது. சென்னையிலோ அல்லது சொந்த ஊரிலோ இருக்கலாம். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனுக்கு மட்டும் தான் சொந்த வீடு சென்னையில் இல்லை. ஏனென்றால் அவருக்கு யாவருமே வீடு கொடுக்க முன்வரவில்லை, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அவருக்கு ஒதுக்கப்பட்டது. அதில் மருதம் ஆசிரியர் பயிற்சி பள்ளி என்ற ஒன்றை உருவாக்கி அந்த பயிற்சி பள்ளியில் முதல்வருக்காக ஒதுக்கப்பட்டுள்ள அறையில்தான் அவர் தங்கி வருகிறார். முதலில் அவருக்கு வீடு இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வேளச்சேரி பொறுத்தவரையில் மழை பெய்தால் அதிக தண்ணீர் தேங்க கூடிய பகுதி என்பது எல்லோருக்குமே தெரியும். அப்படி தண்ணீர் தேங்கியிருந்த நிலையில் அவர் இருக்கையில் ஏறி செல்ல வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டது. 

கடந்த 10 நாட்களாகவே அவர் தங்கியிருந்த அந்த தண்ணீரில் தான் நடந்து சென்றார், வேறு வழியின்றி நாங்களும் அப்படித்தான் செல்கிறோம், ஆனால் ஒரு பொது இடத்திற்கு செல்லும்போது மழையில் நனைந்துவிடக்கூடாது என்பது தான் அதன் நோக்கம். அன்று திருமாவளவன் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. அப்படியான சூழலில் ஒருவர் எப்படி அந்த தண்ணீரில் நடந்து செல்ல முடியும், நாம் அப்படி செல்வோமா.?  வேறு வழியே இல்லை என்பதால்தான் அவர் அப்படி செல்ல நேர்ந்தது. இப்படிப்பட்ட சூழலில் ஒருவர் எப்படி செல்ல முடியும். பொதுவெளியில் இப்படி நடந்திருந்தால் அது நீங்கள் சொல்வது போல விமர்சிக்கலாம், அவர் தங்கியிருக்கும் இடத்தில் இப்படி தண்ணீர் சூழ்ந்திருக்கும் பட்சத்தில் அப்படி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆகவே விடுதலை சிறுத்தைகள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் இதை சமூகவலைதளத்தில் பரப்பி வெறுப்பு பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகவே அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை எடுக்கப்பட்டு வருகிறது. தண்ணீரில் கால் வைத்தால் வீக்கம் அதிகரிக்கும் பிரச்சினை அவருக்கு இருக்கிறது.

அத்துடன் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்பதனால் அந்த அவசரத்தில் தண்ணீரில் எப்படி செல்ல முடியும், அவர் ஷூ அணிந்திருந்தார் என்பதனால் அப்படி சென்றார். பல இயற்கை சீற்றங்களில் புயல் மழை வெள்ளம் போன்ற சாக்கடைகளில் இறங்கி மக்கள் சேவை ஆற்றியவர் எங்கள் தலைவர். நாடாளுமன்றத்திற்கு செல்லும் போது தண்ணீரில் நனைந்து செல்ல முடியாது என்பதுதான் அதற்கான காரணம், இந்த சமூகமும் சேறு சகதியில் உழன்ற சமூகம் தான். நாங்கள் சாக்கடையிலும் தண்ணீரிலும் கலக்கிற சமூகம்தான். இந்த சமூகத்தால் இதையெல்லாம் மற்றவர்களைப் போல தவிர்த்துவிட்டோ, கடந்துவிட்டோ செல்ல முடியாது. பாஜக உள்ளிட்ட கட்சிகள் வெறுப்புணர்ச்சி காரணமாக இதை தவறாக பரப்பி வருகின்றனர். என அவர் கூறியுள்ளார்.
 

click me!