சிறுமிகளிடம் அங்கங்கே கை வைப்பாங்க...தேவாலயத்தில் அந்த சாதியினரை இழிவுபடுத்திய பெண் மதபோதகர்... அதிரடி கைது..!

By Thiraviaraj RMFirst Published Nov 30, 2021, 1:48 PM IST
Highlights

பெண்களுக்கு குடும்பத்தில் பாதுகாப்பில்லை என்றும் பள்ளிக்கூடங்களில் சுத்தமாக பாதுகாப்பில்லை என்றும் குறிப்பிட்டார்.

நாடார் சமுதாயத்தை இழிவாக பேசிய கிறிஸ்தவ பெண் மத போதகரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் சோமங்கலம் அடுத்த வரதராஜபுரத்தை சேர்ந்த கிறிஸ்தவ பெண் மதபோதகர் பியூலா செல்வராணி நாடார் சமுதாயம் குறித்து இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.

‘’பெண்களுக்கு குடும்பத்தில் பாதுகாப்பில்லை என்றும்  பள்ளிக்கூடங்களில் சுத்தமாக பாதுகாப்பில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும் தனது கணவர் பள்ளியில் ஆசிரியராக இருப்பதாகவும், இருந்தாலும் பள்ளிகளிலும் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை என்றும், ஆண் ஆசிரியர்களிடம் மட்டுமல்ல பெண் ஆசிரியைகளிடம் இருந்தும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக ஒரு சமூகத்தின் பெயரை சொல்லி அவர்களது கடைகளுக்கு பொருள் வாங்கச்செல்லும் சிறுமிகளிடம் பொருட்கள் கொடுக்கும் போது அந்த கடைக்காரர் சிறுமிகளிடம் அத்துமீறுவதாக கூறினார்.

 அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பியூலாவின் இந்த வீடியோ வைரலான நிலையில், மத போதகர் பியூலா செல்வராணி மீது நடவடிக்கை எடுக்க கோரி, பல்வேறு வியாபார அமைப்புகள் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் இது தொடர்பாக புகார் செய்யப்பட்டது.

அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் பியூலா செல்வராணி மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தற்போது மன்னிப்பு கேட்டு பெண் மத போதகர் பியூலா செல்வராணி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், வாய் தவறி பேசிவிட்டதாகவும் தான் எந்த உள்நோக்கத்துடனும் ஜாதி வன்மத்துடனும் பேசவில்லை என்றும் தெரிவித்து இருந்தார். மேலும் நாடார் சமூக மக்களையும் வியாபாரிகளையும் புண்படுத்தும் வகையில் பேசியதை எண்ணி வேதனைடைந்ததாகவும் அனைவரிடத்திலும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அந்த விடியோவில் தெரிவித்து இருந்தார்.  
 
இந்த நிலையில் அவர் சோமங்கலத்தில் இருப்பதாக வந்த தகவலையடுத்து குன்றத்தூர் போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

click me!