பாஜகவின் ஸ்லீப்பர்செல் கமல்...! சதி செய்கிறார்... கடுமையாக விமர்சித்த பிரபலம்...!

 
Published : Jun 14, 2018, 02:28 PM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
பாஜகவின் ஸ்லீப்பர்செல் கமல்...! சதி செய்கிறார்... கடுமையாக விமர்சித்த பிரபலம்...!

சுருக்கம்

writter charu nivetha attack kamalhassan

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது 'விஸ்வரூபம் 2' திரைப்படம். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சற்று கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. 

ஒரு சிலர் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இந்த படத்தின் டிரைலர் இருப்பதாக சமூக வலைதளத்தில் பாராட்டினர். அதே போல் சிலர் முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துக்கள் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது பிரபல எழுத்தாளர் சாருநிவேதா, கமல்ஹாசனின் படங்கள் குறித்து கருத்து கூறியபோது, 'ஹேராம்', 'உன்னைப்போல் ஒருவன்' என ஆரம்பத்தில் இருந்தே கமல்ஹாசன் படங்களில் முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துக்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் பாரதிய ஜனாதா கட்சியின் ஸ்லீப்பர்செல் தான் கமல் என்றும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.

கமலஹாசனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான எழுத்தாளர் சாருநிவேதா, கமலஹாசன் அரசியலுக்கு வந்த பின்னர் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். 

கமல்ஹாசன், பாஜகவின் கொபசெ என்றும், திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் சதி செய்ய பாஜக கமல்ஹாசனை பயன்படுத்தி வருவதாகவும் சாருநிவேதா கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!