மும்பை பாந்திராவில் தொழிலாளர்கள் திரண்டதால் தடிஅடி.!! விளக்கம் கேட்கும் மத்திய உள்துறை அமைச்சகம்.!!

By Thiraviaraj RMFirst Published Apr 14, 2020, 10:50 PM IST
Highlights

மும்பை பாந்திராவில் வெளிமாநில மக்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி போலீஸ் கலைத்தது குறித்து உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு வருகிறது.

T.Balamurukan

மும்பை பாந்திராவில் வெளிமாநில மக்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி போலீஸ் கலைத்தது குறித்து உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு வருகிறது.
மும்பையில் சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் இதயம்  என்று அழைக்கப்படும் மும்பையில், வெளி மாநிலத் தொழிலாளர்கள் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் முறைசாரா தொழிலாளர்கள்.  நாடு முழுவதும் ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில்,  தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக் கோரி  மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தங்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில்லை என்றும் இனியும் தங்களால் இங்கு இருக்க முடியாது என்றும் கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். சமூக விலகலை கடைபிடிக்காமல் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை மீறி மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்திராவில் மக்கள் கூடியது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் விசாரித்து வருகிறார். 
 

click me!