வாங்க அப்டியே பீர் சாப்டுக்கிட்டே பேசலாம் !!  முதலமைச்சரை வம்புக்கிழுத்த பெண் எழுத்தாளர்!!

Asianet News Tamil  
Published : Feb 16, 2018, 10:32 AM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
வாங்க அப்டியே பீர் சாப்டுக்கிட்டே பேசலாம் !!  முதலமைச்சரை வம்புக்கிழுத்த பெண் எழுத்தாளர்!!

சுருக்கம்

Women writter call manohar parikkar to have a bottle if bear

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சுப் பேசிய  கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு  வாங்க பீர் குடித்துக் கொண்டேபேசலாம் என பெண் எழுத்தாளர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவா முதல்வா் மனோகா் பாரிக்கா் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது கோவா மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளமாக இருந்தாலும், இங்கு போதைப்பொருள் சந்தையும் பெருகி விட்டது என்றும்,  தற்போது மாநிலத்தில் பெண்கள் கூட பீா் குடிக்கின்றனா். இது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கின்றது என தெரிவித்தார்.

முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் இந்தப் பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டுவிட்டரில் #GirlsWhoDrinkBeer என்ற ஹேஷ்டேக் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது.

இந்நிலையில், டெல்லியைச் சோ்ந்த பெண் எழுத்தாளா் ஒருவா் பீா் சாப்பிட்டுக் கொண்டே உங்களை சந்திக்கலாமா என்று கோவா முதலமைச்சர் மனோகா் பாரிக்கருக்கு  அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த கோட்டா நீலிமா என்ற பெண் எழுத்தாளர், மேனோகர் பாரிக்கருக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் நானும் எனது கருத்தை ஒத்துடையவர்களும் வரும் மார்ச் 5 ஆம் தேதி உங்கள் அலுவலத்துக்கோ அல்லது உங்கள் வீட்டுக்கோ வருகிறோம், பீர் குடித்துக்கொண்டே சந்திக்கலாமா என தெரிவித்துள்ளார்.

பெண் எழுத்தாளரின் இந்த டுவிட்டர் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மகுடம் சூட்ட போகும் பெண்கள்.. திமுக கூட்டணிக்கு 45% வாக்குகள்.. கருத்து கணிப்பு முடிவால் சிறகடிக்கும் அமைச்சர் நேரு
நாடாளுமன்றம் சென்ற பி.டி.உஷா.. கணவர் அதிர்ச்சி மரணம்..! வீட்டில் நடந்தது என்ன.?