
திமுக தலைவா் கருணாநிதி உடல் நலம் தேறிவரும் நிலையில் தற்போது தினமும் தனது பேரன் அருள்நிதியின் மகன் மகிழனை பொஞ்சி மகிழ்ந்து பொழுது போக்கி வருவதாக தகவ்லகள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசியல் மட்டுமின்றி இந்திய அரசியலிலும் மூத்த அரசியல் தலைவராக விளங்கிவருபவர் திமுக தலைவா் கருணாநிதி.
நாடகம்,சினிமாத்துறை, எழுத்துப் பணி, அரசியல் என பல்வேறு துறைகளில் தடம் பதித்தவா் கருணாநிதி,. ஓய்வு என்ற வார்த்தைக்கே ஓய்வு கொடுத்தவா் என்று பலராலும் போற்றப்படுபவர்.
நாள்தோறும் 18 மணி நேரத்துக்கும் மேலாக உழைத்து வந்த கருணாநிதி கடந்த 2016ம் ஆண்டு முதல் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கோபாலபுரம் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்.
சிகிச்சை காரணமாக தொண்டையில் பொருத்தப்பட்ட குழாய் அவருக்கு பேசுவதற்கு பெரும் தடையாய் அமைந்துள்ளது. இதனால் யாருடனும் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது அவா் சிறந்த முறையில் உடல்நலம் தேறி வருவதாக கூறப்படுகிறது.
கருணாநிதியின் தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள குழாய்க்கு பதிலாக தற்போது சிறிய அளவிலான குழாய் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் விரைவில் பேசத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மு.க.தமிழரசுவின் மகனும் நடிகருமான அருள்நிதியின் 2 வயது குழந்தை மகிழன் நாள்தோறும் தனது தாத்தாவைப் பார்ப்பதற்காக கோபாலபுரம் வந்துவிடுகிறார். குழந்தையுடன் குறைந்தது 2 மணி நேரமாவது கருணாநிதி கொஞ்சிப்பேசி மகிழ்கிறார்,
இதற்காக மு.க.தமிழரசு தினமும் தனது பேரன் மகிழனை கருணாநிதியின் முன்னிலையில் கொண்டுவந்து விடுகிறாராம். மகிழனுடன் கருணாநிதி தொடர்ந்து பேசுவதைப் பார்த்த டாக்டர்கள் . இது மிகவும் ஆரோக்கியமான செயல். மகிழனை தினமும் கருணாநிதியிடம் அழைத்துவந்து விடுங்கள். இது அவர் பேசுவதற்கு எளிதாக அமையும் என்று தெரிவித்துள்ளனா்.