பெண் பத்திரிகையாளர்கள் அவ்வளவு யோக்கியமா?’ பெண் MP நக்கல் பேச்சு...

By sathish kFirst Published Oct 13, 2018, 4:47 PM IST
Highlights

‘பெண் பத்திரிகையாளர்கள் வரிசையாக தங்கள் பத்திரிகை ஆசிரியர்கள் குறித்தும் தங்கள் நிறுவன அதிகாரிகள் குறித்தும் மிடு’ புகாரில் கூறிவருவது அவ்வளவு ஏற்கத்தக்கதாக இல்லை’ என்று, தலையை ஒழுங்காக வாரியிருக்கும் தமிழிசை போல் காட்சியளிக்கும்

‘பெண் பத்திரிகையாளர்கள் வரிசையாக தங்கள் பத்திரிகை ஆசிரியர்கள் குறித்தும் தங்கள் நிறுவன அதிகாரிகள் குறித்தும் மிடு’ புகாரில் கூறிவருவது அவ்வளவு ஏற்கத்தக்கதாக இல்லை’ என்று, தலையை ஒழுங்காக வாரியிருக்கும் தமிழிசை போல் காட்சியளிக்கும், மத்தியப் பிரதேச மாநில பாஜக மகளிர் அணித் தலைவர் லதா கெல்கர் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சரும், பா.ஜ.க. பிரமுகரும், பிரபல பத்திரிகையாளருமான எம்ஜே. அக்பர் மீது புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.  இதுவரை 6 பெண் பத்திரிகையாளர்கள் அக்பரின் அத்துமீறல்களை திரைக்கதை வசனங்களுடன் விலாவாரியாக விவரித்திருக்கிறார்கள்.  எந்த நிமிடத்திலும் அவர் ராஜினாமா செய்தே தீரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் லதா கெல்கரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேட்டனர். அதற்குப் பதிலளித்த லதா கெல்கர், ’மீ டூ’ பிரசாரத்தை நான் வரவேற்கிறேன். ஆனால் ஒரு ஆண் தன்னை தவறாகப் பயன்படுத்துவதைக் கூட தடுக்க முடியாத அளவுக்கு நம்ம ஊர் பெண் பத்திரிகையாளர்கள்  அப்பாவிகள் இல்லை என்று நான் கருதுகிறேன் என்று நக்கலாக பதிலளித்தார்.  

இதன் மூலம் அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கிடமானவை என்று மறைமுகமாக அவர் சுட்டிக் காட்டியுள்ளது பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!