பேஸ்புக் பிரபலம் கிஷோர் கே.சுவாமி கைது..! உண்மையான பின்னணி இது தான்..!

By Selva KathirFirst Published Oct 2, 2019, 10:03 AM IST
Highlights

சில மாதங்களுக்கு முன்னர் அந்த பெண் செய்தியாளர் குறித்து மிகவும் தரக்குறைவாகவும், அறுவெறுக்கத் தக்க வகையிலும் கிஷோர் ஒரு பதிவை பேஸ்புக்கில் பதிவிட்டதாக சொல்கிறார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் செய்தியாளரின் கணவர், தனது தொடர்புகள் மூலம் கிஷோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பேஸ்புக்கில் பிரபலமாக திகழ்ந்து வரும் கிஷோர் கே.சுவாமி கைது செய்யப்பட்டதற்கான உண்மையான காரணம் தெரியவந்துள்ளது.

நேற்று காலை யாரும் எதிர்பாராத வகையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கிஷோர் கே.சுவாமியை கைது செய்தனர். பெண் பத்திரிகையாளர்கள் சுமார் 20 பேர் திரண்டு கிஷோருக்கு எதிராக சில ஆண்டுகளுக்கு முன்னர் புகார் கொடுத்தனர். இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் உயர்நீதிமன்றம் வரை பெண் பத்திரிகையாளர்கள் சென்றனர்.

ஆனாலும் கூட இந்த வழக்கில் கிஷோரை போலீசார் கைது செய்யவில்லை. ஆனால் நேற்று திடீரென கிஷோர் கைது செய்யப்பட்ட உடன் பெண் பத்திரிகையாளர்கள் பலரும் துள்ளிக் குதித்தனர். செத்தான் சேகர் என்கிற ரீதியில் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தாங்கள் கொடுத்த புகாரில் தான் கிஷோர் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறி புளகாங்கிதம் அடைந்தனர்.

ஆனால் விசாரித்து பார்த்த போது பெண் பத்திரிகையாளர்கள் கொடுத்த புகாரில் கிஷோரை போலீசார் கைது செய்யவில்லை. மாறாக ஒரே ஒரு பெண் பத்திரிகையாளர் தனிப்பட்ட முறையில் கொடுத்த புகாரில் தான் கிஷோர் கைது செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. பிரபல ஊடகத்தில் செய்தியாளராக பணியாற்றும் ஒரு மூத்த செய்தியாளரின் மனைவி தான் அந்த பெண் செய்தியாளர்கள்.

சில மாதங்களுக்கு முன்னர் அந்த பெண் செய்தியாளர் குறித்து மிகவும் தரக்குறைவாகவும், அறுவெறுக்கத் தக்க வகையிலும் கிஷோர் ஒரு பதிவை பேஸ்புக்கில் பதிவிட்டதாக சொல்கிறார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் செய்தியாளரின் கணவர், தனது தொடர்புகள் மூலம் கிஷோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால் அதற்குள் அந்த பதிவை கிஷோர் நீக்கிவிட்டதாக சொல்கிறார்கள். பின்னர் தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அந்த பதிவை மீட்ட பெண் செய்தியாளரின் கணவர் மீண்டும் போலீஸ் அதிகாரிகளை நாடினார். மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்லப்போவதாக எச்சரித்ததாக தெரிகிறது. இதனை அடுத்தே கிஷோர் நேற்று கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் மீது வலுவான பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இதனால் உடனடியாக அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டதாக சொல்கிறார்கள்.

click me!