மிஸ்டர் ஜெய்சங்கர் ! எங்க ? எப்படி ? பேசணும்னு மோடிக்கு சொல்லிக் கொடுங்க ! செமையா கலாய்த்த ராகுல் காந்தி !

By Selvanayagam PFirst Published Oct 2, 2019, 9:48 AM IST
Highlights

இந்தியாவின் வெளியுறவுத்துறை கொள்கைகள் குறித்து பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு பேச கற்றுக் கொடுங்கள் வெளியுறவுத் துறை  அமைச்சர் ஜெய்சங்கருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் அடித்துள்ளார்.
 

அண்மையில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திரமோடி, ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ‘ஹவுதி மோடி’ (மோடி நலமா?) என்ற நிகழ்ச்சியில் உரையாற்றினார். அமெரிக்கவாழ் இந்தியர்கள் 50 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், யாரும் எதிர்பாராத விதமாக, பிரதமர் மோடி திடீரென- அமெரிக்க ஜனாதிபதிக்கு வாக்கு சேகரிக்க ஆரம்பித்து விட்டார். அதுவும் அவரது ஸ்டைலில், “ஆப்கி பார், ட்ரம்ப் சர்க்கார்”(இந்த முறையும் ட்ரம்ப் அரசுதான்) என்று கூறி கைத்தட்டல்களையும் அள்ளினார்.

அந்த நிகழ்ச்சியில், ஆளும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த  ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மட்டுமன்றி, அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர். மோடியின் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது.

இந்தியாவின் பிரதமர் என்ற வகையிலேயே, தான் அமெரிக்காவிற்கு வந்துள்ளதையும், இங்கு குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு வாக்குசேகரிப்பது, அந்த நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகி விடும் என்ற குறைந்தபட்ச புரிதல் கூட இல்லாமல் மோடி நடந்து கொண்டார் என விமர்சனங்களும் எழுந்தன. 

இதனிடையே, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தற்போதுஅமெரிக்கா சென்றுள்ள நிலையில், அவரிடம் வாஷிங்டனில் அமெரிக்க பத்திரிகையாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பியுள்ளனர்.  ஆனால் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் ஜெய்சங்கர் திணறினார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது  டுவிட்டர் பக்கத்தில், “நன்றி ஜெய்சங்கர், பிரதமர் மோடியின் திறமையின்மையை நீங்கள் நன்றாக மறைக்கிறீர்கள். பிரதமர் மோடியின் ஒரு சார்பு ஒப்புதலால் ஜனநாயக கட்சியினர் இந்தியாவுடன் கொண்டிருந்த இணக்கமான சூழலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
சிக்கலைத் தீர்க்க நீங்கள் தலையிடுகிறீர்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இந்த விவகாரம் பற்றி பேசும் நீங்கள் பிரதமர் மோடிக்கு இந்தியாவின் வெளியுறவு தொடர்பான  கொள்கைகளை கற்றுக் கொடுங்கள் என தெரிவித்துள்ளார்.

click me!