திமுகவின் வெற்றி வேலூரில் பல் இளித்தது... இடைத்தேர்தலில் காலி ஆகிவிடும்... ஹெச். ராஜா அதிரடி கணிப்பு!

By Asianet TamilFirst Published Oct 2, 2019, 7:46 AM IST
Highlights

காஷ்மீருக்கான 370-வது சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை அனைத்துக் கட்சியினரும் ஆதரித்தனர். ஆனால், தமிழகத்தில் மட்டும் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடத்தியவர்கள் பிரிவினைவாதிகள். 

தமிழக இடைத்தேர்தலில் திமுக 100 தோல்வியைத் தழுவும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். 
விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல் அக். 21 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்தலில் திமுக கூட்டணியில் திமுக, காங்கிரஸ் தலா ஓரிடத்தில் போட்டியிடுகிறது. அதிமுக இரு இடங்களில் போட்டியிடுகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், இரு வாரங்களுக்கு தேர்தல் பிரசாரம் களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இடைத்தேர்தல் குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.


பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு ட்விட்டர் பதிவு போட்டிருந்தார். அதில்,”மக்களவைத் தேர்தலுக்கு அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வோம்: மு.க.ஸ்டாலின் - மீண்டும் பொய், மீண்டும் பித்தலாட்டம், மீண்டும் ஏமாற்று வேலை. பழக்கதோஷம் மாறாதல்லவா!” என்று ராமதாஸ் ஸ்டாலினை கிண்டல் செய்திருந்தார். அதை ரீட்வீட் செய்திருக்கும் ஹெச். ராஜா, “ இந்தப் பொய், பித்தலாட்டம் எல்லாம் வேலுாரில் 90 சதவீதம் பல் இளித்து விட்டது. இடைத்தேர்தலில் 100 சதவீதம் தோல்வியைத் தழுவுவர்” என்று தெரிவித்துள்ளார்.


முன்னதாக பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா, “காஷ்மீருக்கான 370-வது சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை அனைத்துக் கட்சியினரும் ஆதரித்தனர். ஆனால், தமிழகத்தில் மட்டும் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடத்தியவர்கள் பிரிவினைவாதிகள். தற்போது பகவத் கீதை குறித்து கடந்த சில நாட்களாக ஊடகங்களில் விவாதங்கள் நடக்கின்றன. இதை  ஊடகங்கள் எப்படி அனுமதிக்கின்றன?. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்தச் செயலுக்காக ஊடகங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து திட்டமிட்டு வதந்திகளை பரப்பி வருகின்றன” என குற்றம் சாட்டி பேசினார். 

click me!