ரயில்நிலைய வாளாகத்தில் பெண் சடலம்.. சென்னையில் குலை நடுங்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்.

Published : Apr 12, 2021, 11:57 AM IST
ரயில்நிலைய வாளாகத்தில் பெண் சடலம்.. சென்னையில் குலை நடுங்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்.

சுருக்கம்

அங்கு கைப்பற்றப்பட்ட அழுகிய உடல் மற்றும் ஆடையை கைப்பற்றிய காவத்துறையினர் அதனை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய அனுப்பினர். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்துள்ளனர். 

கிரின்வேஸ்சாலை மெட்ரோ ரயில் நிறுத்த வளாகத்தில் பல மாதங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்ட பெண் சடலம் கண்டுப்படிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை கிரின்வேஸ் சாலை வளாகத்தில் சடலம் புதைக்கப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு ரகசிய புகார் வந்தது. இதன் அடிப்படையில் அபிராமபுரம் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது பல மாதங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்டிருந்த பெண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. 

அங்கு கைப்பற்றப்பட்ட அழுகிய உடல் மற்றும் ஆடையை கைப்பற்றிய காவத்துறையினர் அதனை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய அனுப்பினர். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்துள்ளனர். மேலும், கண்டறியப்பட்ட சடலத்தில் பெண் ஆடை இருந்ததால் அவை பெண்ணின் சடலமாக இருக்கலாம் எனவும், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.  கைப்பற்றப்பட்ட சடலத்தின் அடையாளங்கள் ஏதும் தெரியாததால், பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் அறிக்கைகள் கிடைத்த பின்னரே இதர விவரங்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. 

மேலும், சம்பவ இடத்தில் மதுபான பாட்டில்கள் குவியலாக உள்ளதும், சிசிடிவி கேமரா இல்லாமல் வெளிச்சமின்றி இருள் சூழ்ந்து கிடப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்கள் காணாமல் போன புகார்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் இல்லங்கள் இருக்கும் கிரீன்வேஸ் சாலை ரயில்நிறுத்தத்தில் இதுபோன்ற சம்பவம் நடத்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!