குடும்பத்தோடு கொரோனா சிகிச்சை... துரைமுருகன் வீட்டில் கொள்ளை முயற்சி..!

Published : Apr 12, 2021, 11:54 AM IST
குடும்பத்தோடு கொரோனா சிகிச்சை... துரைமுருகன் வீட்டில் கொள்ளை முயற்சி..!

சுருக்கம்

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், ஏலகிரி மலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. துரைமுருகனின் பண்ணை வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துரைமுருகனுக்கு கொரோனா வந்ததையடுத்து அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மற்றும் துரைமுருகனின் சகோதரர் துரை சிங்காரம் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்ட துரைமுருகனுக்கு கொரோனா பாதிப்பு அதிகமானது. இதனையடுத்து மருத்துவர்களின் அறிவுரைப் படி தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் திமுகவினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Govt Scheme: ரூ.4,000 அரசு மானியம் வேண்டுமா? இந்த ஆவணங்கள் உங்களிடம் இருந்தால் போதும்!
பாஜக பக்கம் சாயும் திமுக? பிரச்சனைகளின் அடிப்படையில் ஆதரவளிக்க திட்டம்? பரபரக்கும் டெல்லி.! திமுகவின் அடுத்த மூவ் என்ன?