சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் மாற்றம் ஏற்படுமா? அமைச்சர் கடம்பூர் ராஜூ பரபரப்பு தகவல்..!

By vinoth kumarFirst Published Sep 10, 2020, 6:11 PM IST
Highlights

தமிழக அரசின் சிறந்த நடவடிக்கையின் காரணமாக  கொரோனா வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இறப்பு விகிதம் குறைந்துள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தற்போது ஊரடங்கு தளர்த்தப் பட்டுள்ள நிலையில் மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

சசிகலா வெளியே வருவதால் அதிமுகவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளரிடம் கூறியதாவது;- தமிழக அரசின் சிறந்த நடவடிக்கையின் காரணமாக  கொரோனா வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இறப்பு விகிதம் குறைந்துள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தற்போது ஊரடங்கு தளர்த்தப் பட்டுள்ள நிலையில் மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

திரையரங்குகளில் ஜிஎஸ்டி, கேளிக்கை வரிகுறைப்பு மத்திய அரசு சம்பந்தப்பட்டது. ஏற்கனவே 100 ரூபாய் டிக்கெட் வரை 18 சதவீதமும், 100 ரூபாய் டிக்கட் வரை 28 சதவீதம் ஜிஎஸ்டி என இரட்டை வரிவிதிப்பை இந்தியாவிலேயே தமிழகம் மட்டுமே பெற்றுள்ளது.

மேலும், சசிகலா வெளியே வர இருப்பதால் அதிமுகவில் மாற்றம் ஏற்படுமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு  அதிமுகவில் எந்த மாற்றத்தையும் யாராலும் ஏற்படுத்த முடியாது என்றார். முதல்வர், துணை முதல்வரின் நல்வழிகாட்டுதலுடன் அதிமுக சிறப்போடு இயங்குகிறது. அரியர்ஸ் தேர்வை பொருத்தவரை அரசு எடுத்த முடிவை மக்களும், மாணவர்களும் வரவேற்றுள்ளனர். இது மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு. ஏ.ஐ.சி.டி.இ. வழிகாட்டுதலின்படி தான் முடிவெடுக்கப்பட்டுள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

click me!