சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக கூட்டணியா? தனித்துப் போட்டியா? பிரேமலதா விஜயகாந்த் தகவல்..!

By vinoth kumarFirst Published Aug 25, 2020, 12:46 PM IST
Highlights

விஜயகாந்த் இனி கிங் ஆக இருக்க வேண்டும் என்பதே தேமுதிக தொண்டர்களின் எண்ணமாக உள்ளது என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

விஜயகாந்த் இனி கிங் ஆக இருக்க வேண்டும் என்பதே தேமுதிக தொண்டர்களின் எண்ணமாக உள்ளது என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

தேமுதிக கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயகாந்துக்கு இன்று பிறந்தநாள். இன்றுடன் 68 வயது முடிவடைந்து 69-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி கட்சியினர் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா விஜயகாந்த் தற்போது வரை அதிமுக கூட்டணியில் தொடர்ந்து தேமுதிக நீடிக்கிறது. ஆனால், எதிர்காலத்தில் கூட்டணி குறித்து டிசம்பர் அல்லது ஜனவரியில் பொதுக்குழு, செயற்குழு கூடி முடிவெடுக்கும் என்றார். 

அதிமுக சார்பில் மாநிலங்களவை சீட் கிடைக்காதது வருத்தம் அளிக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா, தேமுதிகவிற்கு கிடைக்க வேண்டியது உரிய நேரத்தில் கிடைக்கும். தேசிய கொடி அவமதிப்பு விவகாரத்தில் எஸ்.வி.சேகருக்கு ஒரு நியாயம்? ஸ்டாலினுக்கு ஒரு நியாயமா? என காட்டமாக கேள்வி எழுப்பினார். அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்பது அக்கட்சியின் உட்கட்சி விவகாரம். 

மேலும், பேசிய அவர் விஜயகாந்த் இனி கிங் ஆக இருக்கவேண்டும் என்பதே தேமுதிக தொண்டர்களின் எண்ணம். தேமுதிக தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே தொண்டர்கள், நிர்வாகிகள் எண்ணமாக உள்ளது எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

click me!