இந்தியா ராணுவத்தில் தன்னிறைவு அடைய எடுத்த அதிரடி முடிவு..!! அதிநவீன ஏவுகணைகளை உள்நாட்டில் தயரிக்க திட்டம்..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 25, 2020, 12:07 PM IST
Highlights

இந்தியாவுடன் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில், இந்தியா பாதுகாப்பு துறையை பலப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்தியாவுடன் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில், இந்தியா பாதுகாப்பு துறையை பலப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுமார் 58,000 கோடி ரூபாய் மதிப்பில் ரஃபேல் போர் விமானங்கள் பிரான்சில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில்,  ரஷ்யாவிலிருந்து  எஸ்-400 ஏவுகணை தடுப்பு முறைகளை இறக்குமதி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் மேக்-இன் இந்தியா மற்றும் தற்சார்பு பொருளாதாரம் குறித்து மத்திய அரசு பேசிவரும் நிலையில், பாதுகாப்பு துறைக்கு தேவையான தளவாடங்களையும், உபகரணங்களையும் உள்நாட்டிலேயே தயாரிக்க இந்திய பாதுகாப்புத்துறை முடிவு செய்துள்ளது. 

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் மூலம் அது செய்யப்பட உள்ளது. இந்நிலையில் (டிஆர்டிஓ) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு திங்கட்கிழமை 108 பாதுகாப்பு தயாரிப்புகளின் பட்டியலை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் சமர்ப்பித்துள்ளது. பாதுகாப்பு உபகரணங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளது. இதில் நீண்ட தூரப்பயண ஏவுகணைகள் மற்றும் இலகு ரக போர் விமானங்களும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டு 9-அன்று சுமார் 101 பாதுகாப்பு தயாரிப்புகளை இறக்குமதி செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தடை விதித்தது. உள்நாட்டிலேயே அவைகளை தயாரிப்பதன் மூலம் தன்னிறைவு பெற்ற இந்தியாவை ஊக்குவிப்பதுடன், இறக்குமதியின் சுமையை குறைப்பது இதன் நோக்கம் என பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. டிஆர்டிஓ மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் வழங்கிய பட்டியலில், மினி மற்றும் மைக்ரோ யுஏவி ( ட்ரோன்கள் ) (ஆர்.ஓ.வி) நீருக்கடியில் ரிமோட் கண்ட்ரோல் சாதனங்கள், குறுகிய வரம்பு மலை நடைபாதைகள்,  மிதக்கும் பாலங்கள் உள்ளிட்ட 108 பாதுகாப்பு தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன. 

இதுதவிர கவச வாகனங்கள், டெரஸ்ட் எதிர்ப்பு வாகனங்கள், புரளி வலைகள், குண்டு துளைக்காத வாகனங்கள், ஏவுகணை கவசம், ராக்கெட் ஏவுகணை செயற்கைக்கோள், வழிசெலுத்தல் ரிசீவர் மற்றும் டி.ஆர் (டிரான்ஸ்மிட் / ரிசீவ்) தொகுதி ஆகியவை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. டிசம்பர் 2025 க்குள்  சுமார் 101 தயாரிப்புகள் தடை செய்யப்பட்டு உள்நாட்டிலேயே அவைகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளன. ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் ஆலோசனையைப் பின்பற்றி  பொருட்கள் மற்றும் தளவாடங்களை உற்பத்தி செய்யப்பட உள்ளன. அதில் பொதுவாக உபகரணங்கள் மட்டுமல்லாமல், பீரங்கி துப்பாக்கிகள், தாக்குதல் துப்பாக்கிகள், சோனார் அமைப்புகள், போக்குவரத்து விமானம், எல்.சி.எச் ரேடார்கள், ஒளி போர் விமானம், நில தாக்குதல் பயண ஏவுகணைகள், (நீண்டதூர) போன்ற உயர் தொழில்நுட்ப ஆயுத அமைப்புகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

 

click me!