ஆன்மிகம் திமுகவை வீழ்த்தி விடுமா..? மு.க.ஸ்டாலின் சவால்..!

Published : Dec 12, 2020, 06:30 PM ISTUpdated : Dec 13, 2020, 12:23 PM IST
ஆன்மிகம் திமுகவை வீழ்த்தி விடுமா..? மு.க.ஸ்டாலின் சவால்..!

சுருக்கம்

ஆன்மிகத்தை காரணம் காட்டி தி.மு.க.வை வீழ்த்த எந்த சக்தியாலும் முடியாது என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

ஆன்மிகத்தை காரணம் காட்டி தி.மு.க.வை வீழ்த்த எந்த சக்தியாலும் முடியாது என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

வருகிற 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சிறப்பு பொதுக்கூட்டங்களை நடத்த இருக்கிறார். அதன்படி, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் காணொலி காட்சி வழியே இன்று பேசினார்.

அப்போது அவர், ’’ராமநாதபுரத்தில் குடிநீர் திட்டம் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதுதான் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க.வை வீழ்த்த எந்த சக்தியாலும் முடியாது. ஆன்மிகத்தை காரணம் காட்டி தி.மு.க.வை வீழ்த்தலாம் என சிலர் நினைக்கின்றனர். மக்களுக்கு சேவை செய்வதுதான் மகத்தான ஆன்மிகம் என சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். ஏழைகளை காக்க கூடியவர்கள்தான் உண்மையில் ஆன்மிகத்தை நேசிப்பவர்கள். ஏழைகள் முன்னேற்றத்திற்கு உருவாக்கப்பட்ட கட்சிதான் தி.மு.க. என அவர் பேசியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
DMK Ministers : பரபரப்பை கிளப்பிய 6 திமுக முன்னாள் அமைச்சர்களின் கைது! யார் யார்? ஏன் கைது செய்யப்பட்டார்கள்?