தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பதா? அல்லது தள்ளி வைப்பதா..? ஒரிரு தினங்களில் முக்கிய முடிவு அறிவிப்பு.

By Ezhilarasan BabuFirst Published Nov 4, 2020, 3:44 PM IST
Highlights

இந்நிலையில் பள்ளி,கல்லூரிகள் திறப்பு குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ,உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பதா? அல்லது தள்ளி வைப்பதா? என்பது குறித்து முதலமைச்சருடன் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார், உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா மற்றும் பள்ளிக்கல்வி, உயர்கல்வித்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. 

தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், ஊரடங்கை வரும் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் பள்ளிகளில் வரும் 16ஆம் தேதி முதல் 9,10,11,12-ம் வகுப்புகளும், கல்லூரிகளும் தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தற்போது சரியான தருணம் அல்ல என்று திமுக உள்ளிட்ட கட்சிகளும் ,ஆசிரியர் சங்கங்களும் கருத்து தெரிவித்துள்ளன. 

இந்நிலையில் பள்ளி,கல்லூரிகள் திறப்பு குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ,உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுடன் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா பரவல், பருவமழையை கருத்தில் கொண்டு பள்ளிகள் கல்லூரிகள் திறப்பதில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுக்குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில தினங்களிம் வெளியாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

 

click me!