மோடி தீபாவளி, மோடி விஜயதசமின்னு சொல்வீங்களா.? அதென்ன மோடி பொங்கல்.? போட்டுத்தாக்கும் தமிழக எம்.பி.!

By Asianet TamilFirst Published Jan 1, 2022, 8:51 PM IST
Highlights

ராஜேந்திர பாலாஜி ஆடிய ஆட்டத்துக்கும் அதிகார போதையில் செய்த அலங்கோலத்துக்கும் தற்போது பிராயச்சித்தம் தேடி வருகிறார்.தமிழக காவல்துறை அவரை தேடி பிடித்து சட்டத்துக்கு முன்பாக நிறுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் குறித்து ஜப்பான் பிரதமரிடமும், ஜைக்கா நிறுவனத்திடம்தான் கேட்க வேண்டும் என்று விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கோரிக்கை வைத்துள்ளார்.

மாணிக்கம் தாகூர் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பிரதமர் மோடி மதுரைக்கு வருகிறார். அதையொட்டி, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்று அவருக்குக் கடிதம் எழுதியிருந்தேன். எனவே, மத்திய அமைச்சர்களை அழைத்து பேசி, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் அறிவிப்பை வெளியிட வேண்டும். மதுரைக்கு வரும் பிரதமர் பொங்கல் பரிசாக இதை அறிவிக்க வேண்டும். விஜயதசமி, தீபாவளி போன்ற விழாக்கள் கொண்டாடும்போது மோடியின் பெயரை இணைத்து கொண்டாடுவார்களா? அப்படியிருக்க, மோடி பொங்கல் என கொண்டாடுவது?

தை மாதத்தில்தான் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அந்தப் பொங்கலை மார்கழி மாதத்தில் கொண்டாடுவது போன்ற நகைச்சுவை எதுவும் இல்லை. விளம்பரத்துக்காக இதை செய்கிறார்களா எனத் தெரியவில்லை. தைப்பொங்கலை மார்கழியில் நடத்திவிட்டு அதற்குப் பெயர் 'மோடி பொங்கல்' என்று கூறுவது வருத்தமான செயல்.  தமிழக அரசின் நலன்களுக்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. அதனால், கோ-பேக் மோடி என்ற ஹாஷ்டேக் வந்தது. அதற்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகள் ஆதரவளித்தோம். தற்போது அரசு விழாவில் கோ பேக் மோடி என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? ஆக, ஆட்சியிலிருக்கும் திமுகவின் நோக்கம் தமிழர்களுக்கான சலுகைகளைப் பெறுவது மட்டுமே.

ராஜேந்திர பாலாஜி ஆடிய ஆட்டத்துக்கும் அதிகார போதையில் செய்த அலங்கோலத்துக்கும் தற்போது பிராயச்சித்தம் தேடி வருகிறார். தமிழக காவல்துறை அவரை தேடி பிடித்து சட்டத்துக்கு முன்பாக நிறுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மதுரையில் எய்ம்ஸ் குறித்து ஜப்பான் பிரதமரிடமும், ஜைக்கா நிறுவனத்திடம்தான் கேட்க வேண்டும். 2026-ல் கட்டி முடிக்கப்படும் என்று அவர்களே கூறி விட்டார்கள். எனவே, 2026 வரை எய்ம்ஸுக்காக காத்திருக்க வேண்டியது நம் கடமை. இதில் ஜப்பான் பிரதமரையும், ஜைக்கா நிறுவனத்தையும் நம்புகிறோம். மோடியையும், மோடி அரசையும் நம்புவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை.” என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். 

click me!