வாபஸ் வாங்கினால் ரஜினியை சும்மா விட்டுடுவோமா..? திராவிடர் விடுதலை கழகத்தினர் கொக்கரிப்பு..!

Published : Jan 24, 2020, 06:03 PM ISTUpdated : Jan 24, 2020, 06:22 PM IST
வாபஸ் வாங்கினால் ரஜினியை சும்மா விட்டுடுவோமா..? திராவிடர் விடுதலை கழகத்தினர் கொக்கரிப்பு..!

சுருக்கம்

பெரியார் குறித்த பேச்சுக்கு ரஜினி மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் ஏன் வாபஸ் பெறப்பட்டது என்பது குறித்து திராவிடர் விடுதலை கழகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.   

பெரியார் குறித்த பேச்சுக்கு ரஜினி மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் ஏன் வாபஸ் பெறப்பட்டது என்பது குறித்து திராவிடர் விடுதலை கழகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

பெரியாரை பற்றி துக்ளக் விழாவில் ரஜினி அவதூராக பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திராவிடர் விடுதலைகழகம் சார்பாக பல்வேறு இடங்களில் புகார் அளிக்கப்பட்டது. திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் அளித்த புகார் மனுமீது நடவடிக்கை எடுத்து ரஜினியை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என திராவிடர் விடுதலை கழக சென்னை மாவட்ட செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதேபோல கோவையை சேர்ந்த திராவிடர் விடுதலை கழக நிர்வாகி நேருதாஸ் ஆகியோர்  உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போதுகாவல்துறைக்கு அவகாசம் வழங்கிய பின்னர்தான் நீதிமன்றத்தை அணுகி இருக்க வேண்டும். புகார் கொடுத்த 15 நாட்களுக்கு முன்பாகவே நீதிமன்றத்தை அணுகியது ஏன்? ஆகையால் இந்த இரு வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.  இந்நிலையில் ரஜினி மீதான புகார்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க ஒருவார அவகாசம் அளித்ததே மனுக்கள் வாபஸ் பெற காரணம் என விளக்கம் தரப்பட்டுள்ளது. 

மேலும், ஒருவாரத்துக்கு பிறகு புகார்கள் மீது காவல்துறை எஃப். ஐ.ஆர் பதிவு செய்யத் தவறினால் மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவோம். பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய ரஜினியின் மீது சட்ட நடவடிக்கை பாயும் வரை சட்டப்போராட்டம் தொடரும்’’என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!